நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

936 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சேர்க்கை
சிNo edit summary
சேர்க்கை
வரிசை 1:
'''நற்செய்தி''' என்னும் சொல் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமய மரபில் சிறப்பான இடம் பெறுகிறது. '''நல்ல செய்தி''' என்று பொருள்தருகின்ற இச்சொல் '''சுவிசேஷம்''' எனவும் வழங்கப்பட்டது. அதாவது, "சு+விசேஷம் = நல்ல+செய்தி". இதன் மூலச் சொல் [[கிரேக்க மொழி]]யிலிருந்து பெறப்பட்டது. "எவாங்கேலியோன்" என்னும் அச்சொல்லின் நேரடிப் பொருள் "நல்ல செய்தி" என்பதே (εὐαγγέλιον, euangelion (eu- "நல்ல", -angelion "செய்தி"). கிறித்தவ சமயம் கற்பிக்கின்ற மையச் செய்தியே தொடக்கத்தில் "நற்செய்தி" என அழைக்கப்பட்டது. அதாவது, "இயேசு கிறித்து இவ்வுலக மக்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டு, அவர்களுக்கு விடுதலை வழங்கி, கடவுளோடு நிலையான ஒன்றிப்பில் இணைந்து பேரின்பம் அனுபவிக்கும் பேற்றினைத் தம் சிலுவைச் சாவின் வழியாகவும் உயிர்த்தெழுதல் வழியாகவும் பெற்றுத் தந்தார்" என்பதே "நற்செய்தி"யின் உட்கரு ஆகும்.
 
 
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அடங்கியுள்ள நூல்களில் ஒன்றாகிய "கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்" என்னும் மடலில் (கி.பி. 54-55) புனித பவுல் "நற்செய்தி"யைக் கீழ்வருமாறு விளக்குகிறார்:
 
*"சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த ''நற்செய்தி''யை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்...கிறித்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்..." (1 கொரிந்தியர் 15:1,3-4).
 
புனித பவுல் "உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில்" அதே கருத்தை வெளிப்படுத்துகிறார்:
*"இந்த நற்செய்தி கடவுளுடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமை உள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறித்து" (உரோமையர் 1:3-4).
 
== "நற்செய்தி" "நற்செய்தி நூல்" ஆன வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/515992" இருந்து மீள்விக்கப்பட்டது