"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,548 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
→‎ஏமாற்றம்!: கருத்து
சி (ஒலிபெயர்ப்பு குறித்து ஓர் ஐயப்பாடு)
(→‎ஏமாற்றம்!: கருத்து)
;ஒலிபெயர்ப்பு குறித்து ஓர் ஐயப்பாடு
* மயூரநாதன், அண்மையில் விக்சனரியில் நிகழ்ந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். ஒலிபெயர்ப்பு முறை பற்றிப் பேசினீர்கள். எந்த ஒலியை எந்த எழுத்தால்/குறியீட்டால் குறிப்பது? இதற்கான '''தமிழ் விக்கி/விக்சனரி பட்டியல்''' உருவாக்கப்பட்டுள்ளதா? நானும் ஞானப்பிரகாசனைப் போல ஒரு புது பயனர்/பங்களிப்பாளர். எனவே ஒலிபெயர்ப்புப் பற்றிய விக்கியின் முறையோ தரப்படுத்தலோ தெரியவில்லை. பதில் அறிய அவா. நன்றி!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 12:22, 30 ஜூலை 2010 (UTC)
 
இ.பு.ஞானப்பிரகாசன், நான் சூலை 6, 2010 அன்றுதான் வாட்டர்லூவுக்கு வந்தேன். வந்தபின் பல கோணங்களில் பல இழுப்புகள் இருந்தன. உங்கள் குறிப்பையும் பார்க்கவில்லை. இபொழுதுதான் பார்த்தேன். நீங்கள் ஏமாற்றம் அடைந்தீர்கள் என்று அறிய வருத்தம்தான். ஆனால் பலருடைய பணி இழுப்புகளையும், இங்கு விக்கிப்பீடியா தொடர்பான பிறபல இழுப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கூறிய தீர்வு இங்கு ஏற்கனவே நடப்பில் உள்ளதுதானே?! (ஆங்கிலத்தில் அடைப்புக்குறிகளுக்குள் இடுவது). ஆனால் உரோமன் எழுத்துகளில் இட்டாலும் ஒலிப்பு தெளிவாகாது. அனைத்துலக ஒலியெழுத்து முறைப்படி இட்டால் பெருமளவு சரியாக அமையும் (ஆனால் அதுவும் துல்லியமாகாது, நுட்ப வேறுபாடுகள் கணக்கில் அடங்காதன). ஆனால் இம்முறை எளிதானதல்ல. இலங்கைத்தமிழர் தமிழ்நாட்டுத்தமிழர் ஒலிப்பு வேறுபாடுகளும், தமிழ் எழுத்துக்கான ஒலிப்புகளிலும் குறிப்பிடும்படியான வேறுபாடுகளும் உள்ளனதான். இது பற்றி விரிவாக அலசலாம், ஆனால் ஏற்கனவே இவற்றைச் செய்து இணக்க முடிவோடு தொடர்கிறோம். மீண்டும் கிளறுவதால் நற்பயன் இருக்க வாய்ப்புகள் குறைவு. செய்ய வேண்டிய பணிகள் இன்னும் எவ்வளவோ இருக்கும் பொழுது, இதனை இப்பொழுது எடுக்க விருப்பம் இல்லை, தேவையும் இல்லை என்பது என்கருத்து. --[[சிறப்பு:Contributions/99.237.20.227|99.237.20.227]] 15:27, 30 ஜூலை 2010 (UTC)
 
பவுல், உங்களுக்கு விக்சனரியிலேயே மறுமொழி இட்டிருக்கின்றேன். இது பற்றி தொடக்கநாட்காளில் இருந்தே கூறிவருகின்ரேன். எளிய தீர்வு உள்ளது. பின்னர் விரிக்கின்றேன்.--[[சிறப்பு:Contributions/99.237.20.227|99.237.20.227]] 15:27, 30 ஜூலை 2010 (UTC)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/566727" இருந்து மீள்விக்கப்பட்டது