"தமிழிசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.<ref>[http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> இதைத் தொடர்ந்து தொலுங்கு [[விசய நகரப் பேரரசு|விசய நகர அரசர்கள்]] தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கு ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, [[தமிழிசை இயக்கம்]] தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.
 
19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் ஒரு மறுமலர்ச்சிக்கு உள்ளாகின. அரிய பல பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகள் அறிஞர்களால் ஆயப்பட்டு பதிப்புப் பெற்றன. இவற்றின் ஊடாக தமிழிசை பற்றிய பல செய்திகளும் கிடைக்கப்பெற்றன. இக் காலத்தில் தமிழிசையை சீரிய முறையில் ஆழமாக விரிவாக முதலில் ஆய்தவர் ஆபிரகாம் பண்டிதர் ஆவார். 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமது ஆய்வை கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலாக 1917 இல் வெளியிட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571029" இருந்து மீள்விக்கப்பட்டது