மூளைக் கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவலிணைப்பு
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
| MeshID = D001932
}}
மூளைக் கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வகையான வளர்ச்சி, அசாதாராணமாக ஏற்படும் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் ஏற்படுகிறது. அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம். எவ்வகைக் கட்டியாக இருப்பினும், அவற்றினால் மண்டையோட்டினுள் ஏற்படும் மேலதிக அமுக்கம் காரணமாக தாக்கம் ஏற்படும். தாக்கத்தின் அளவானது கட்டி இருக்குமிடம், அதன் வகை, வளர்ச்சி நிலை என்பவற்றில் தங்கியுள்ளதுஅடங்கியுள்ளது. இவ்வகையான கட்டி இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும், இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது இன்றியமையாதது.
 
மூளைக் கட்டி இருக்கையில் மூளையின் தொழிற்பாடு மாற்றமடைதலால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு, கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச் சுற்று, வலிப்பு, பார்வைப் புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற்றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மூளைக்_கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது