பண்பாட்டு மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 192.248.64.37 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 627132 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 6:
[[20 ஆம் நூற்றாண்டு]] மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். [[ஜூலியன் ஸ்டெவார்ட்]] (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். [[குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ்]] (Claude Lévi-Strauss) போன்ற வேறு சிலர், மேற்படி ஒரே மாதிரித் தன்மை மனித சிந்தனை அமைப்பின் அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக வாதிட்டனர்([[structuralism]]பார்க்கவும்).
 
20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் [[இனவரைவியல்]] (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மானிடவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் [[பங்குபற்றி அவதானித்தல்|பங்குபற்றி அவதானித்தனர்]]. இந்த முறை [[துரோபிரியண்ட் தீவு]]களில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான [[புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி]] (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, [[பாபின் தீவு]]களில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த [[பிரான்ஸ் போவாஸ்]] (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும்ஒවවருமித்தஎன்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் ĢĴĥĥ(diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மானிடவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும்.
 
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக-பண்பாட்டு மானிடவியல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், இரு வேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மானிடவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: [[சமயம்சார் மனிதவியல்|சமயம்]], [[பொருளியல்சார் மனிதவியல்|பொருளாதாரம்]] மற்றும் [[அரசியல்சார் மானிடவியல்|அரசியல்]]) போன்றவற்றில் கவனம் செலுத்தினர். அமெரிக்க "பண்பாட்டு மானிடவியலாளர்", மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உலகத்தைப் பற்றியுமான அவர்களுடைய பார்வையை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுபற்றி, விசேடமாக குறியீட்டு முறையில் (உ.ம்: [[கலை]] மற்றும் [[பழங்கதை]]கள்) எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிக் கவனம் செலுத்தினர். இவ்விரு அணுகுமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் குவிவடைந்தன (உ.ம்: [[உறவுமுறை]] ஒரு குறியீட்டு முறைமையும், சமூக நிறுவனமும் ஆகும்.) என்பதுடன் பொதுவாக ஒன்றுக்கொன்று --- ஆக அமைந்தன. இன்று பெரும்பாலும் எல்லா சமூக-பண்பாட்டு மானிடதவியலாளரும் இருபகுதி முன்னோடிகளின் ஆய்வுகளையுமே ஏற்றுக்கொள்வதுடன், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும், என்ன சொல்கிறார்கள் என்பதிலும் சம அளவு ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டு_மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது