எசாயா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எசாயா (நூல்)

சி சேர்க்கை
வரிசை 5:
==எசாயா நூல் பெயர்==

'''எசாயா''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יְשַׁעְיָהו (Yeshayahu) எனவும், கிரேக்கத்தில் Ἠσαΐας (Ēsaïās) எனவும், இலத்தீனில் Isaias எனவும் ஒலிக்கப்படும். எசாயா என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது. எசாயா கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்தவர். அவர் சிறப்பான முறையில் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்டவர்.

==எசாயா நூல் பகுதிகள்==
வரிசை 22:

இவற்றுள் பெரும்பாலானவை எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இசுரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலுயுறுத்தப்படுகின்றது; நேர்மை, நீதி, ஓய்வுநாள், பலி, மன்றாட்டு ஆகியவற்றின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு பெருமான் தம் பணியின் தொடக்கத்தில் இந்நூலின் (61:1-2) சொற்களைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது.

==எசாயா நூலிலிருந்து குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதி==

'''எசாயா 49:15-16'''

"ஆண்டவர் கூறுவது இதுவே:

பால்குடிக்கும் தன் மகவைத்

தாய் மறப்பாளோ?

கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது

இரக்கம் காட்டாதிருப்பாளோ?

இவர்கள் மறந்திடினும்,

நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை

நான் பொறித்து வைத்துள்ளேன்."

"https://ta.wikipedia.org/wiki/எசாயா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது