லூக்கா நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 3:
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''லூக்கா நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் மூன்றாவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_Luke லூக்கா]</ref>. இது [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மூன்றாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''லூக்கா எழுதிய நற்செய்தி''', Κατὰ Λουκᾶν εὐαγγέλιον(Kata Loukan Euangelion = The Gospel according to Luke), என்பதாகும்.
 
 
மற்ற நற்செய்தி நூல்களான [[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு நற்செய்தி]],[[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தி]] என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து [[ஒத்தமை நற்செய்தி நூல்கள்]] (Synoptic Gospels) <ref>[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்திகள்] </ref> என்று அழைக்கப்படுவதும் உண்டு.
 
 
வரிசை 18:
 
 
கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே கிறிஸ்தவ மரபு, இந்நூலின் ஆசிரியர் ''லூக்கா'' எனவும், இவர் தூய பவுலின் உடன் பணியாளராக இருந்தார் எனவும் நிலைநாட்டியுள்ளது. [[கொலோசையர் (நூல்)|கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில்]] பவுல் ''அன்பார்ந்த மருத்துவர் லூக்கா...உங்களை வாழ்த்துகின்றார்'' எனக் குறிப்பிடுகிறார் (கொலோ 4:14). பவுல் [[பிலமோன் (நூல்)|பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில்]] லூக்காவைக் குறிப்பிடுகிறார் (வசனம் 24). அதுபோலவே, [[2 திமொத்தேயு (நூல்)|2 திமொத்தேயு]] 4:11இலும் பவுல், ''என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்'' என்று குறிப்பிடுகிறார்.
 
லூக்கா நற்செய்தியும் புதிய ஏற்பாட்டு நூலான [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகளும்]] ஒரே ஆசிரியரின் எழுதுகோலிலிருந்து பிறந்தனவே என்பது அறிஞர்களின் ஒருமனதான முடிவு. திருத்தூதர் பணிகள் நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாம் நேரடியாகக் கண்டதும் பங்கேற்றதுமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். ''நாங்கள் பயணம் செய்தோம்'', ''நாங்கள் தங்கியிருந்தோம்'', ''நாங்கள் போதித்தோம்''(காண்க திப 16:10-17; 20:5-15; 21:1-28:16; 27-28) [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் கூற்றுகள் நூலின் ஆசிரியர் தூய பவுலின்பவுலோடு பயணம் செய்த உடன்பணியாளர் என்பதைக் காட்டுகின்றன.
 
 
வரிசை 47:
 
 
எனவே, ''நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை... ஒழுங்குபடுத்தி எழுத'' லூக்கா முன்வருகிறார். அவர் குறிப்பிடும் ''நிகழ்ச்சிகள்'' இயேசு பற்றிக் கிறிஸ்தவகிறித்தவ சமூகம் அறிவித்துவந்த மரபைக் குறிக்கும். நூல் ''தியோபில்'' என்பவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கிரேக்க மொழியிலுள்ள இச்சொல் ''கடவுளின் அன்பர்'' எனப் பொருள்படும். இது லூக்காவை ஆதரித்த ஒரு புரவலராக இருக்கலாம் அல்லது பொதுவான பெயராக நின்று, கிறிஸ்தவகிறித்தவ நம்பிக்கை கொண்ட எவரையும் குறிக்கலாம். லூக்கா தம் நூலை எழுதுவதற்குப் பிற மூல ஆதாரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். அவற்றுள் நிச்சயமாக மாற்கு நற்செய்தியும், “Q” என்று அறியப்படும் ஊக ஏடும்.உள்ளடங்கும். இங்கே குறிப்பிடப்படுகின்ற (“Q” என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்று பொருள்) உள்ளடங்கும். <ref>[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்திகள்]</ref>. நூல் எழுதப்பட்டதன் நோக்கமும் தரப்படுகிறது. அதாவது, தியோபில் ''கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு'' லூக்கா நூலை எழுதினார்.
 
 
வரிசை 65:
 
 
வளர்ந்த திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி இயேசுவின் வருகையை ஆயத்தப்படுத்துகிறார்; அக்கால ஆட்சியாளர்களின் நெறிதவறிய வாழ்க்கையைக் கண்டித்ததால் சிறைத் தண்டனை பெறுகிறார் (3:1-20). இந்நிகழ்ச்சி இயேசு யோவானைச் சந்திக்கும் முன்பே நிகழ்வதாக லூக்கா கூறுவது கவனிக்கத்தக்கது. இதை எவ்வாறு விளக்குவது? லூக்காவின் [[இறையியல்]] பார்வையில், திருமுழுக்கு யோவான் மீட்பு வரலாற்றின் பழைய படிநிலையைச் சேர்ந்தவர், அதாவது இஸ்ரயேலின்இசுரயேலின் காலமாகிய [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுக்]] காலத்தவர் (காண்க 16:16). ஆனால் இயேசு ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிக்கிறார். எனவேதான் இயேசுவுக்கு யோவானே திருமுழுக்கு அளித்தார் என்ற செய்தி லூக்கா நற்செய்தியில் வெளிப்படையாகத் தரப்படவில்லை.
 
 
லூக்கா, இயேசுவைக் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|''கடவுளின் மகன்'']] என இயேசு திருமுழுக்குப் பெற்ற வேளையில் காட்டுகிறார் (3:21-22). இயேசுவின் குலவழிப் பட்டியலைப் பின்னிருந்து முன்னேறும் வரிசையில் அமைத்துள்ளார். ஆபிரகாமுக்கும் அப்பால் சென்று முதல் மனிதராகிய ஆதாம் வரையிலும் லூக்கா இயேசுவின் மூதாதையரை வரிசைப்படுத்துகிறார். ஆதாமும் ''கடவுளின் மகன்'' என அழைக்கப்படுகிறார் (3:23-38). ஆனால் ஆதாம் அலகையின் சோதனையை முறியடிக்கவில்லை. மாறாக, இயேசு அலகையால் சோதிக்கப்பட்டபோது, உண்மையாகவே [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|கடவுளின் மகன்]] எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை நடைமுறையாக எண்பிக்கிறார் (4:1-13). இயேசு அலகையை முறியடிக்கிறார் எனக் காட்டுகிறார் லூக்கா.
 
 
வரிசை 74:
 
 
இயேசுவின் வரலாற்றில் அடுத்த முக்கிய கட்டம் அவர் கலிலேயாவில் ஆற்றிய பணி (4:14-9:50). இப்பகுதியை வடிவமைப்பதில் லூக்காவில் சில தனிப் பண்புகள் உள்ளன. கலிலேயப் பணிக்கு முன் இயேசு நாசரேத்து தொழுகைக் கூடத்துக்குப் போன நிகழ்ச்சியை லூக்கா விவரிக்கிறார் (4:16-30). இந்த நிகழ்ச்சியில் லூக்காவுக்குப் பெருவிருப்பான பல கருப்பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை: இயேசு திருநூல் கூற்றுக்களைகூற்றுகளை நிறைவுசெய்கிறார்; பண்டு புகழ்பெற்றிருந்த இறைவாக்கினராகிய எலியா மற்றும் எலிசா போன்று இயேவும் பிற இனத்தாருக்குப் பொருள்செறிந்த விதத்தில் வல்லமை மிகுந்த இறைவாக்கினாராக வருகிறார்; இயேசு தம் சொந்த ஊரில் இருந்த தொழுகைக் கூடத்திலேயே புறக்கணிக்கப்படுகிறார்.
 
 
வரிசை 86:
 
 
இயேசுவின் எருசலேம் பயணம் தொடர்வதை அவ்வப்போது லூக்கா வாசகர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே செல்கிறார். எடுத்துக்காட்டாக, 9:51; 13:22, 33; 17:11; 18:31 ஆகிய இடங்களைக் காண்க. பயணம் செல்லும் வேளையில் இயேசு தம் சீடருக்குப் போதனை வழங்கிக்கொண்டே செல்கிறார்; இயேசுவின் சீடராக மாறுவது எதில் அடங்கியிருக்கிறது ("சீடத்துவம்''") <ref>[http://en.wikipedia.org/wiki/Discipleship சீடரின் பண்புகள்]</ref> என விளக்கிச் சொல்கின்றார். இப்போதனைப் பகுதியில் லூக்கா “Q” ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் பலவற்றைச் சேர்த்துள்ளார். எருசலேமுக்குச் செல்லும் இயேசு வெளிக்கட்டாயத்தினால் அங்குப் போகவில்லை, மாறாக, தாமாகவே விரும்பிச் செல்கிறார்; தம்மைப் பின்செல்ல விரும்புவோரும் தம்மோடு இணைந்து பயணத்தில் சேர்ந்துகொள்ளக் கேட்கிறார் (காண்க 9:51-62).
 
 
பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் இயேசு எளிதில் மறக்கமுடியாத பல செறிவுமிக்க [[இயேசுவின் உவமைகள்|உவமைகளைக்]] கூறிச் செல்கிறார். [[நல்ல சமாரியன் உவமை|நல்ல சமாரியர் உவமை]] (10:29-37), [[மன்னர் மகனின் திருமணம் உவமை|பெரிய விருந்து உவமை]] (14:7-24), [[ஊதாரி மைந்தன் உவமை|காணாமற்போன மகன் உவமை]] (15:11-32), [[செல்வந்தனும் இலாசரசும் உவமை|செல்வரும் இலாசரும் பற்றிய உவமை]] (16:19-31) ஆகியவை இப்பகுதியில் உள்ளத்தைக் கவரும் அழகிய கதைகள் ஆகும்.
 
 
வரிசை 125:
 
 
உலக வரலாற்றில் முக்கிய இடம் பெறுபவராக [[இயேசு கிறித்து|இயேசுவைச்]] சித்தரிக்கிறார் லூக்கா (காண்க 3:1-2). இயேசு மீட்பு வரலாற்றின் மையமும் ஆவார். திருமுழுக்கு யோவான் காலம் வரையிலான இஸ்ரயேல் வரலாற்றுக்கும், பெந்தக்கோஸ்து நாளிலிருந்து தொடங்கும் [[இயேசு கிறித்து|திருச்சபை வரலாற்றுக்கும்]] நடுவே மீட்பு வரலாற்றின் மையத்தில் உள்ளார் இயேசு என லூக்கா காட்டுகிறார்.
 
 
இயேவுக்கு வழங்கப்படும் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|சிறப்புப் பெயர்களுள்]] லூக்கா அதிகமாகப் பயன்படுத்துவது ''இறைவாக்கினர்'' என்பதாகும். இயேசுவை இறைவாக்கினராகக் காட்டும் இடங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, லூக் 4:16-30; 7:16, 39; 13:33-34; 24:19, 25-27) ஆகியவற்றைக் கூறலாம். தமது பணிக்காலம் முழுவதும், ஏன், சிலுவையில் தொங்கி வேதனையுற்ற துயர வேளையில் கூட, இயேசு நல்லதொரு முன்மாதிரி வழங்குகிறார்; வீரத் தியாகியாக உயிர்விடுகிறார்.
 
 
வரிசை 158:
 
 
மக்களோடு (குறிப்பாக, ஒடுக்கப்பட்டோரோடு) உணவருந்துவதும் விருந்துகளில் கலந்துகொள்வதும் இயேசுவுக்குப் பழக்கமான ஒன்று. இயேசுவின் பணிக்காலத்தின்போது அவர் பல முறை விருந்துகளில் கலந்துகொண்டதாக லூக்கா கூறுகிறார். இந்த பல விருந்துகளின் உச்சக் கட்டமாக அமைந்தது இயேசுவின் கடைசி இரா உணவு (லூக் 7:36-50; 9:10-17; 11:38-42; 14:7-24). இந்த விருந்துகள் [[இயேசுவின் உயிர்ப்புக்குப்உயிர்த்தெழுதல்|இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப்]] பிறகு அவர் தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடு அருந்திய விருந்துக்கும் (லூக் 24:13-49), பின்னர் ''திருத்தூதர் திருப்பணிகள்'' நூலில் பலமுறை குறிப்பிடப்படுகின்ற ''அப்பம் பிட்குத''லுக்கும் முன்னறிவுப்புப் போல அமைந்தன எனலாம்.
 
 
லூக்கா இயேசுவை இறைவாக்கினராகக் காட்டுவதோடு [[இயேசுவின் உவமைகள்|தலைசிறந்த போதகராகவும்]] விளக்குகிறார். இயேசுவின் சமவெளிப் பொழிவு (6:20-49) அவரது சீடர்களின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது. இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்யும்போது, தம்மைப் பின்செல்ல விரும்பும் சீடர் எவ்வாறு வாழவேண்டும் என்பது குறித்து வழங்குகின்ற விரிவான போதனைகள் (9:51-19:44) கிறித்தவ வாழ்க்கைக்கும் அறநெறிக்கும் இன்றியமையாத கூறுகளை விளக்கிச் சொல்கின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லூக்கா_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது