மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரைபிலக்கணங்கள்: உரை தி. (உரை மாற்றம்)
வரிசை 20:
:''J'' மின்னோட்டத்தின் செறிவு(சதுர மீட்டருக்கு அம்பியர் (A/m²) எனும் அலகில் அளக்கப்படும்.
 
பொதுவாக ஒரு [[தடையி]] சீரான பண்புகள் கொண்ட ஒருபொருளால் ஆக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பும் (<math>A</math>) கொண்டு இருந்தால், அதன் நீளத்தை (<math>\ell </math>) இரட்டித்தால் அதன் தடையம் (<math>R</math>) இரட்டிக்கும். ஆகவே மின்தடையமானது, நீளத்தின்(<math>\ell </math>) நேர் சார்பு (நேர்விகிதம்) உடையது. அதாவது <math> R \propto \ell </math>. அதே போல குறுக்கு வெட்டுப்பரப்பு இரட்டிப்பாக ஆனால், அது அதிக மின்னோட்டத்துக்கு இடம் தருமாகையால் மின் தடையமானது (<math>R</math>), இரு மடங்காகக் குறையும். இதனால் மின் தடையமானது குறுக்குவெட்டுப் பரப்புக்கு எதிர்விகிதத்தில் (தலைகீழ் சார்பில்) இருக்கும். அதாவது <math> R \propto \frac{1{}{A} </math>. இருவிளைவும் சேர்ந்து மின்தடையம், (<math>R</math>), <math> R \propto \frac{\ell}{A} </math>. இந்த சார்பு (விகித) உறவை சமன்பாடாக ஆக்கும் மாறிலியே மின்தடைமை அல்லது மின் தடைத்திறன் எனப்படுவது. இது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருளின் மாறாத அடிப்படைப் மின்பண்பு ஆகும். மின்தடையம் (<math>R</math>) என்பது கீழ்க்காணும் சமன்பாட்டால் குறிக்கப்பெறும்:
 
:<math>R = \rho \frac{\ell}{A} \,\!</math>