இடுப்பு வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 24:
மனிதரின் இடுப்பு வளையமானது வெவ்வேறு எலும்புகளின் தொகுதியாக உள்ளது. அவையாவன:
*பின் பக்கம், முதுகுப்புறமாக, [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலின்]] வால்ப்பகுதியான, திருவெலும்பும் (sacrum), குயிலலகெலும்பும் (coccyx) (வாலெலும்பும்) காணப்படும்.
*இரு பக்கங்களிலும், முன்புறமாகவும் இடுப்பு எலும்புகள் (hip bones) அமைந்திருக்கும். இந்த எலும்பானது ஆரம்பத்தில், [[பூப்பு|பூப்படைவதற்கு]] முன்னர் புடைதாங்கி (ilium), நாரியம் (ischium), pubisபூப்பென்பு (pubic bone) என்ற மூன்று எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கும். பின்னர் முதிர்ச்சியடைகையில் மூன்றும் இணைந்து ஒரு தனியெலும்பாக மாற்றமடையும்.
 
*கீழ் முடிவுப் பகுதியில், கால்களின் மூட்டுப் பகுதியை இணைக்கும் எலும்பும் காணப்படும்.
==இடுப்புக்குழி==
மனிதரில் உள்ள உடற்குழிகளில் ஒன்றான இடுப்புக்குழியானது இடுப்பு வளைய எலும்புகளால் சூழப்பட்டிருக்கும் குழியாகும். இந்தக் குழிக்குள் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] உறுப்புகளும், [[சமிபாடு|சமிபாட்டுத் தொகுதி]]யின் முடிவுப் பகுதியான [[மலவாசல்|மலவாசல் அல்லது குதம்]] என்ற பகுதியும் காணப்படும். இந்த உள்ளுறுப்புகளை, இடுப்பு வளையமானது இடுப்புக்குழியினுள் வைத்து பாதுகாப்பளிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/இடுப்பு_வளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது