சௌமியமூர்த்தி தொண்டமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆதாரங்கள்
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்
வரிசை 33:
=== பாராளுமன்ற அங்கத்தவர் ===
[[1947]] இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் [[நுவரெலியா]] ஆசனத்தில் போடியிட்டு, 9386 வாக்குகள பெற்றார்ர். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் ரட்ணத்தைவிட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 [[பெப்ரவரி 4]] இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.
=== இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் ===
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான [[டி. எஸ். சேனநாயக்கா]] இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேரிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதபிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுறிமையை பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா [[இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949]] என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனை பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும்குடியுறிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.
 
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சௌமியமூர்த்தி_தொண்டமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது