மினெர்வா மேல் புனித மரியா கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சேர்க்கை
வரிசை 65:
1556இல் இக்கோவில் "இளம் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு உயர்த்தப்பட்டது.
 
==கோவிலின் வெளித் தோற்றம்==
 
இக்கோவிலின் வெளித் தோற்றம் பரோக்கு கலைப்பாணியில் உள்ளது. இதை கார்லோ மதேர்னா 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடிவமைத்தார். பின்னர் "புது-நடுக்காலக் கலைப் பாணியில்" (neo-medieval style) வெளித் தோற்றம் திருத்தப்பட்டது. 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் டைபர் ஆற்றில் வெள்ளம் எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை இக்கோவிலின் வெளி முகப்பில் பதிந்த அடையாளங்களிலிருந்து கணிக்க முடிகிறது. நீர் மட்டம் 65 அடி (20 மீட்டர்) உயர்ந்ததும் தெரிகிறது.
 
==யானை மீது ஊசித்தூண்==
 
கோவிலின் வெளிமுற்றத்தில் அமைந்துள்ள விசித்திரமான ஒரு கலைப் பொருள் யானை மீது எழுகின்ற ஊசித்தூண் ஆகும். இதன் வரலாற்றில் சுவையான செய்திகள் உள்ளன. உரோமை நகர் முழுவதிலும் பதினொன்று எகிப்திய ஊசித்தூண்கள் உள்ளன. அவை அனைத்திலும் மிகச் சிறியது இதுவே. இத்தூணின் உயரம் 5.47 மீட்டர். தூணின் மேல் இணைப்பு, தூண் நிற்கின்ற யானை, அடித்தளம், அதன் கீழ் உள்ள நான்கு படிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் 12.69 மீட்டர் ஆகும்.
 
இத்தூணும் இதுபோன்ற இன்னொரு தூணும் எகிப்தில் "சாயிஸ்" (Sais) நகரில் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டவை ஆகும். எகிப்திலிருந்து அத்தூண்களை உரோமைப் பேரரசர் தியோக்ளேசியன் (ஆட்சி: 284-305) உரோமைக்குக் கொண்டுவந்து அவற்றை ஐசிஸ் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலின் முன் எழுப்பச் செய்தார். ஐசிஸ் கோவில் பாழடைந்தபோது ஊசித்தூண் புதைபட்டது. பின்னர் அது கண்டெடுக்கப்பட்டு இன்றைய மரியா கோவிலுக்கு முன் எழுப்பப்பட்டது. ஜான் லொரேன்சோ பெர்னீனி என்னும் கலைஞர் பளிங்கு யானை, ஊசித்தூணின் அடித்தளம் போன்றவற்றை பரோக்கு கலைப்பாணியில் வடிவமைக்க, அவர்தம் மாணவர் ஏர்க்கொலே ஃபெர்ராட்டா என்பவர் 1667இல் அவற்றைச் செதுக்கினார். யானையின் உடலின் ஊடே செல்வதுபோல் ஊசித்தூண் எழுப்பப்பட்டுள்ளது.
 
ஊசித்தூணின் அடியில் உள்ள தளத்தில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ள வாசகம் இது: "விலங்குகளிலெல்லாம் பலம் பொருந்திய விலங்காகிய யானை எகிப்திய அறிவு பொறிக்கப்பட்ட இந்த ஊசித்தூணைத் தாங்கி நிற்பது திடமான அறிவைத் தாங்கிட உறுதியான உள்ளம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது."
இந்த ஊசித்தூண் சிலைத்தொகுப்பு "மினெர்வாவின் கோழிக்குஞ்சு" என்றும் விளையாட்டாகக் குறிக்கப்படுவதுண்டு.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மினெர்வா_மேல்_புனித_மரியா_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது