மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஒருமடியம், இருமடியம்: *உரை திருத்தம்*
→‎பல்மடியம்: *உரை திருத்தம்*
வரிசை 11:
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] bulldog எறும்பு என அழைக்கப்படும் ''Myrmecia pilosula'', ஒரு ஒருமடிய, இருமடிய இனமாகும். இங்கே n=x=1 என்ற எண்ணிக்கையிலேயே, அதாவது ஒருமடிய நிலையில் ஒரே ஒரு நிறப்புரியைக் கொண்ட உயிரணுவே இருக்கும். இதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இருக்க முடியும்<ref>{{cite doi|10.1126/science.231.4743.1278}}</ref>. இவ்வுயிரினத்தில் ஒருமடியம் ஒரு நிறப்புரியையும், இருமடியம் 2 ஒரே மாதிரியான நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.
 
==பல்மடியம் Polyploid)==
எனவே ஒருமடியம் என்பது புணரிகளில் உள்ள நிறப்புரிக் கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. சிலசமயம் ஒரு தனிக்கூட்டத்தில் இருக்கும் நிறப்புரிகளின் எண்ணிக்கை ஒற்றைத்தொகுதி (Monoploid) எனவும் அழைக்கப்படும். அது x என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும். சில உயிரினங்களில் இந்த x உம், n உம் ஒரே எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனிதரில்]] x=n=23. இதனை 2x=2n=46 என்றும் குறிப்பிடலாம். ஆனால் வேறு சில உயிரினங்களில் இந்த x உம், n உம் வெவ்வேறு எண்ணிக்கையையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக ''Triticum aestivum'' எனப்படும் Bread wheat [[தாவரம்|தாவரத்தில்]] 6 கூட்டம்/தொகுதி நிறப்புரிகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] நெருக்கமற்ற, மூன்று வெவ்வேறு இருமடிய [[மூதாதை]] இனங்களின், ஒவ்வொன்றிலுமிருந்து 2 நிறப்புரித் தொகுதிகளைப் பெற்றதன் மூலம், இந்த Bread wheat இனம் 6 தொகுதி நிறப்புரிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த தாவரத்தின் உடல் உயிரணுவானது ஒரு '''அறுமடிய''' (hexaploid) உயிரணுவாகும். இங்கே 2n=6x=42. இங்கே ஒற்றைத்தொகுதியில் (monoploid) உள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை 7 ஆகும். அதாவது x=7. புணரிகளில் உள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை n=21. இந்த புணரிகள் உண்மையில் 3 தொகுதி நிறப்புரிகளைக் கொண்டுள்ளன.
 
பல தாவரங்கள், [[நிலநீர் வாழிகள்]], [[ஊர்வன]], [[பூச்சி]] போன்ற உயிரினங்களில் நான்கு தொகுதி நிறப்புரிகள் (2n = 4x) இருப்பதனால் நான்மடிய (Tetraploid) நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
 
==மனிதரில் மடியநிலை==
மனிதர்கள் இருமடிய நிலையில் உள்ளவர்கள். இவர்களின் கருமுட்டை, விந்து ஆகிய புணரிகள் ஒருமடியமாக இருக்கும். இருமடிய நிலையில் மனிதரின் நிறப்புரிகளின் எண்ணிக்கை 46 ஆகும் (2n=46). இவற்றில் பால்சாரா நிறப்புரிகள் (autosomes) 22 சோடிகளாகவும், பால்சார் நிறப்புரிகள் (sex chromosomes) 1 சோடியாகவும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது