பவளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
'''பவளம்''' என்பது ஒருவகை [[கடல்]] வாழ் [[உயிரினம்|உயிரினமாகும்]]. இவை Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த, அந்தோசோவா (Anthozoa) [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பைச்]] சேர்ந்தவையாகும். நெருக்கமாக அடுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தோற்றத்தைக் காட்டும் சேர்ந்திருப்பு/சமூக அமைப்பைக் கொண்டிருக்கும். இவை [[கல்சியம்]] கார்பனேற்றைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்படை ஒன்றைத் தோற்றுவிக்கும். இதனால் [[வெப்பமண்டலம்|வெப்பமண்டல]] கடல்களில் [[பவளப் பாறைகள்]] உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
 
இவற்றின் சேர்ந்திருப்பில் பல ஒரே மாதிரியான Polyp என அழைக்கப்படும் பாலினமற்ற இனப்பெருக்க தோற்றவமைப்புக்கள் காணப்படும். ஒவ்வொரு polyp உம் சில சென்ரி மீற்றர் நீளமானவையாகவும், சில மில்லி மீற்றர் விட்டத்தைக் கொண்டவையாகவும் இருக்கும். இந்த தலைப்பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் சிறு வாய்போன்ற அமைப்பைச் சுற்றி ஒரு கூட்டம் உணர்கொம்புகள் (tentacles) அமைந்திருக்கும். இந்த உயிரினங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் அடிப்பகுதியில் இவற்றினால் சுரக்கப்பட்ட இறுக்கமான பதார்த்தத்தாலான புறவன்கூடு அமைந்திருக்கும். பல [[சந்ததி]]களூடாக தொடர்ந்து ஒரே இடத்தில் சுரக்கப்படும் இந்த புறவன்கூடு காரணமாக, கடல் [[பாறை]]கள் போன்ற அமைப்புக்களை உருவாக்குவது, இந்த இனங்களின் சிறப்பியல்பாகும்.
 
பொதுவாக இவை பாலினமற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சிலசமயங்களில் புணரிகளை உருவாக்கி, கடல்நீரில் வெளியேற்றுவதன் மூலம் பாலின இனப்பெருக்கத்தையும் செய்கின்றன.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பவளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது