இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சி திருத்தம்
வரிசை 169:
*குழு 4: வலது புறம் உட்பகுதி (வலமிருந்து இடது): பிலிப்பு, செபதேயுவின் மகன் யாக்கோபு, தோமா.
 
==ஓவியத்தில் உடல்நிலைகள், சைககள்சைகைகள், உணர்வுகள்==
 
*லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு ஓவியம் இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றினைச் சித்தரிக்கும் முறையில் மட்டுமே அமையவில்லை. மாறாக, ஓவியத்தில் வருகின்ற ஒவ்வொரு நபரும் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய உடல்நிலை, கை அசைவு, முகம், உதடு, வாய், கண் ஆகியவற்றின் வழியாக ஓவியர் எடுத்துரைக்கிறார்.
 
*லியொனார்டோவின் ஓவியம் "சொற்களின்றிப் பேசுகின்ற கவிதை" எனலாம். அவரே தமது குறிப்புப் புத்தகத்தில் கீழவருமாறுகீழ்வருமாறு விளக்குகின்றார்:
{{cquote|அதுவரை குடித்துக்கொண்டிருந்த ஒருவர் கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு, தலையைச் சாய்த்து இன்னொருவர் கூறுவதைக் கேட்குமாறு அவர் பக்கம் திரும்புகிறார். வேறொருவர், தம் கைவிரல்களை ஒன்றொடொன்று இறுகப் பிணைத்துக்கொண்டு, தம்மை அடுத்திருப்பவரை முகத்தைச் சுளித்து நோக்குகிறார். மற்றொருவர் வியப்பினால் வாயடைத்துப் போய், தம் உள்ளங்கைகளை விரித்துக் காட்டி, தம் தோள்களைக் காது நோக்கி உயர்த்துகிறார். வேறொருவர் தம் ஒரு கையில் ஒரு கத்தியை பிடித்துக்கொண்டு, மறு கையில் சிறிது வெட்டப்பட்ட அப்பத்தை வைத்துக்கொண்டு, தம்மை அடுத்திருப்பவரின் காதுகளில் எதையோ கூறுகிறார். இவரும் மற்றவர் கூறுவதைக் கேட்க தம் செவியை அவரை நோக்கித் திருப்புகிறார்.}}
 
வரிசை 180:
*லியொனார்டோ தருகின்ற குறிப்புகளையும் நம் கண்களுக்கும் உள்ளத்திற்கும் தோன்றுகின்றவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஓவியத்தை நாம் உள்வாங்கினால் அங்கே அச்சம், ஆச்சரியம், கோபம், நம்பவியலாத் தன்மை, மறுப்பு, ஐயம் போன்ற பல உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.
 
*சீமோன் பேதுருவின் வலது கையில் கத்தி இருக்கிறது. இது மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் வழக்கமாக உள்ள சித்தரிப்புத் தான். அவர் இயேசுவை ஒருவர் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்பதை இயேசுவின் வாயிலிருந்து கேட்டதும், ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாமல், அருகிலிருக்கின்ற யோவானின் தோளைத் தம் இடதுகையால் பிடித்து அசைத்து, "யாரைப் பற்றிக் கூறுகிறார் எனக் கேள்" ([[யோவான் நற்செய்தி|யோவான் 13:24]]) என்று சொல்கிறார்.
 
*"இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் யார்" என்னும் கேள்வியைச் சீடர்கள் கேட்கின்றனர். தோமாவுக்கு இயேசு கேட்ட கேள்வியின் பொருள் என்னவென்று புரிந்துகொள்வதில் "ஐயம்" ஏற்படுகிறது. அவர் தம் கையைத் தூக்கி, சுட்டு விரலை உயர்த்தி, இயேசுவிடம் "விளக்கம்" கேட்பது போல் தோன்றுகிறார்.
வரிசை 194:
*லியோனார்டோ யூதாசைச் சித்தரிப்பதில் சில தனிப் பண்புகள் உள்ளன. பெரும்பான்மையான மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் யூதாசு ஒரு மூலையில் பணப்பையோடு இருப்பார். யூதாசுக்கு மட்டும் ஒளிவட்டம் இருக்காது. லியொனார்டோ அப்படி செய்யவில்லை. அவரது ஓவியத்தில் யூதாசு மற்ற திருத்தூதர்களுள் ஒருவராக, அவர்களோடு சேர்ந்தே இருக்கிறார். அவர் தம் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, தம் மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவராக நடக்க வேண்டும். அவர் சபிக்கப்பட்டவர் என்று முன் கூட்டியே விதி என்று ஒன்றும் இருக்கவில்லை என்னும் கருத்தை லியொனார்டோ ஓவியம் உணர்த்துகிறது.
 
*இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உகந்தவராய் இருந்தவர் யோவான். அவரை இளைஞராகச் சித்தரிப்பது வழக்கம். லியொனார்டோவும் அப்படியே செய்துள்ளார். யோவான் இயேசுவைப் போலவே அமைதியாக இருக்கின்றார். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. அவர் சீமோன் பேதுருவின் பக்கம் திரும்பி அவர் கூறுவதற்குச் செவிமடுக்கின்றார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்றார். என்பதை அறிந்தவர் போல அவரது முக பாவனை உள்ளது.
 
=="த டா வின்சி கோட்" புதினம் லியொனார்டோவின் ஓவியத்திற்குத் தரும் விளக்கம்==
 
2003ஆம் ஆண்டில் [[டான் பிரவுன்]] என்னும் அமெரிக்க பரபரப்புப் புனைகதை எழுத்தாளர் [[த டா வின்சி கோட்|த டா வின்சி கோட்: ஒரு புதினம்]] (''The Da Vinci Code: A Novel'') என்னும் தலைப்பில் மர்ம-துப்பறியும் புனைகதை ஒன்றை வெளியிட்டார். அது புனைகதையாக இருந்தாலும் பல வரலாற்றுக் குறிப்புகளயும் உள்ளடக்கியிருந்ததால் கதையில் உள்ள எல்லா செய்திகளும் உண்மையே என்றொரு தவறான எண்ணம் உருவானது. புனைகதையின் ஆசிரியர், "இந்த நாவலில் வருகின்ற கலைப்பொருள்கள், கட்டடக் கலை, ஏடுகள், இரகசிய சடங்குகள் ஆகியவை பற்றிய எல்லா விவரிப்புகளும் சரியானவை" (''All descriptions of artwork, architecture, documents, and secret rituals in this novel are accurate'') என்று நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார்.
 
டான் பிரவுன் எழுதிய புனைகதை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்திற்குக் கற்பனை அடிப்படையில் விளக்கங்கள் தந்தது. அந்த விளக்கப்படி, லியொனார்டோ "சீயோன் மடம்" (''The Priory of Sion'') என்னும் ஐரோப்பிய இரகசிய குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் வரைந்த ஓவியத்தில் இயேசுவின் வலப்புறம் அமர்ந்திருப்பவர் திருத்தூதர் யோவான் அல்ல, மாறாக, மகதலா மரியாதான் அவர். இயேசு மகதலா மரியாவை மணம் செய்திருந்தார். அவர் வழியாக ஒரு பெண்குழந்தைக்கும் தந்தை ஆனார். இயேசுவின் வாரிசைத் தாங்கிய மகதலா மரியாதான் "திருக் கிண்ணம்" (''Holy Grail''). லியொனார்டோ வரைந்த இராவுணவு ஓவியத்தில் "கிண்ணம்" இல்லை; ஆனால் "திருக் கிண்ணமாகிய" மகதலா மரியா இருந்தார்.