சாலமோனின் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய இடுகை
 
சி சேர்க்கை
வரிசை 2:
'''சாலமோனின் கோவில்''' (''Temple of Solomon'') என்பது பண்டைய [[எருசலேம்]] நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Temple_of_Solomon சாலமோனின் கோவில்.]</ref>
 
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்படி]], இக்கோவில் [[இசுரயேல்|இசுரயேலின்]] மன்னராக ஆட்சிசெய்த [[சாலமோன்]] காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.<ref name="Stevens">Stevens, Marty E. [http://books.google.co.uk/books?id=0P9gcFR1MSAC&dq=Temples,+tithes,+and+taxes:&source=gbs_navlinks_s Temples, tithes, and taxes: the temple and the economic life of ancient Israel], pg. 3. Hendrickson Publishers 2006, ISBN 1565639340</ref>
 
ஒருவேளை, [[இசுரயேல்|இசுரயேலர்]] [[எருசலேம்|எருசலேமைக்]] கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்..<ref>''Peake's commentary on the Bible''</ref>
 
ஒருவேளை, [[இசுரயேல்|இசுரயேலர்]] [[எருசலேம்|எருசலேமைக்]] கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.
 
==யாவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்==
{{main|எருசலேம் கோவில்}}
ஒருங்கிணைந்த இசுரயேல் அரசு "தெற்கு அரசு" (யூதா) என்றும், "வடக்கு அரசு" (இசுரயேல்) என்றும் கிமு 10ஆம் நூற்றாண்டில் பிரிந்ததைத் தொடர்ந்து அக்கோவில் இசுரயேலரின் கடவுளாகிய "யாவே" கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் உள்ளே "உடன்படிக்கைப் பேழை" என்னும் பெட்டகமும் வைக்கப்பட்டது.]].<ref>Achtemeier, Paul J. and Roger S. Boraas. The HarperCollins Bible Dictionary. San Francisco, CA: HarperSanFrancisco, 1996. p. 1096.</ref>
 
==அகழாய்வுச் சான்றுகள்==
 
இன்று கிழக்கு எருசலேமில் அரசியல் நிலவரம் நெகிழ்ச்சியாக உளதாலும், கோவில் மலை என்னும் இடம் [[இசுலாம்|இசுலாமியரின்]] புனித இடமாக உளதாலும் விரிவான அகழாய்வுகள் நடைபெற இயலவில்லை. இதுவரை கிடைத்த அகழாய்வுச் சான்றுகளின்படி, சாலமோனின் கோவில் இருந்ததற்கான அகழாய்வு ஆதாரங்கள் இல்லை. விவிலியம் தவிர வேறு சமகால எழுத்துக் குறிப்புகளும் கிடைக்கவில்லை.<ref name=Langmeadp314>{{cite book|url=http://books.google.com/?id=T5J6GKvGbmMC&pg=PA314&dq=%22solomon%27s+temple%22#v=onepage&q=%22solomon%27s%20temple%22&f=false|title=Encyclopedia of architectural and engineering feats|first1=Donald|last1=Langmead|first2=Christine|last2=Garnaut|edition=3rd, illustrated|publisher=ABC-CLIO|year=2001|isbn=157607112X, 9781576071120}}</ref><ref>{{cite book|last=Handy|first=Lowell|title=The age of Solomon: scholarship at the turn of the millennium|year=1997|publisher=Brill|isbn=978-9004104761|url=http://books.google.com/?id=gam10TAOZusC&pg=PA494&dq=temple+of+solomon+non-biblical++contemporary#v=onepage&q&f=false|pages=493–494}}</ref>
 
விவிலிய விளக்கமாக எழுந்த பண்டைய யூத இலக்கியத்தின்படி, சாலமோனின் கோவில் 410 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. அது கிமு 832இல் கட்டப்பட்டு, கிமு 422இல்அழிவுற்றது.
 
{{under construction}}
==சாலமோன் கோவில் பற்றிய சான்றுகள் அடங்கியுள்ள விவிலிய நூல்கள்==
[[File:Tissot Solomon Dedicates the Temple at Jerusalem.jpg|thumb|250px|எருசலேமில் சாலமோன் மன்னர் கோவிலை அர்ப்பணிக்கிறார். ஓவியர்: ஜேம்ஸ் ழாக் ஜோசப் டிஸ்ஸோ அல்லது அவர்தம் மாணவர். காலம்: 1836-1902. பிரான்சு.]]
 
சாலமோன் கட்டிய கோவில் பற்றி நாம் அறியும் தகவல்களுக்கு ஆதாரமாக உள்ளவை கீழ்வரும் விவிலிய நூல்கள் ஆகும்:
*சாமுவேல்
*அரசர்கள்
*குறிப்பேடு
 
இசுரயேலின் கடவுளாகிய யாவேயின் உறைவிடமாக முதலில் கருதப்பட்டது "உடன்படிக்கைப் பேழை" ஆகும். அது "திரு உறைவிடத்தின்" உள்ளே சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டது. இசுரயேலின் பல பிரிவுகளை ஒன்றிணைத்தபின் தாவீது அரசர் உடன்படிக்கைப் பேழையைத் தம் புதிய தலைநகராகிய [[எருசலேம்|எருசலேமுக்குக்]] கொண்டு வந்தார். அங்கு ஒரு கோவில் கட்டியெழுப்புவதும் அக்கோவிலின்.உள்ளே உடன்படிக்கைப் பேழையை வைப்பதும் அவருடைய எண்ணமாய் இருந்தது. இவ்வாறு உடன்படிக்கைப் பேழைக்கு நிலையான உறைவிடம் அளிக்க விரும்பிய தாவீது, கோவில் கட்டுவதற்காகப் "போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினார்" (1 குறிப்பேடு 21:18-24).
 
ஆனால், தமக்குக் கோவில் கட்டுவது தாவீது அல்ல, தாவீதின் மகனாகிய சாலமோனே அக்கோவிலைக் கட்டுவார் என்று யாவேக் கடவுள் தாவீதிடம் கூறினார். கீழ்வரும் விவிலியப் பகுதிகள் சாலமோன் கட்டிய கோவில் பற்றிய விவரங்களைத் தருகின்றன:
*1 அரசர்கள் 6:1-38.
*1 அரசர்கள் 7.
*1 அரசர்கள் 8.
 
==கோவில் கட்ட ஏற்பாடுகள்==
 
சாலமோன் மன்னர் தீர் நாட்டு மன்னராகிய ஈராம் என்பவரை அணுகி, கோவில் கட்டத் தேவையான கேதுரு மரங்கள், கட்டடக் கலைஞர்கள் வேண்டுமென்று கேட்டுப் பெற்றார். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்தார் (காண்க: 1 அரசர்கள் 6:19). கடவுள் மக்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எழுதப்பட்ட இரு கற்பலகைகள் உடன்படிக்கைப் பேழையின் உள் இருந்தன. இவ்வாறு, சாலமோன் "கடவுள் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை அவருக்காகக் கட்டினார்"; அக்கோவிலை அர்ப்பணம் செய்தார் (காண்க: 1 அரசர்கள் 1 அரசர்கள் 8:14-21).
 
சாலமோன் கட்டிய கோவில் எங்கே இருந்தது என்பதைத் துல்லியமாக அறிய இயலவில்லை. இன்று "பாறைக் குவிமாடம்" (''Dome of the Rock'') என்று அழைக்கப்படுகின்ற "கோவில் மலை" (''Temple Mount'') பகுதியில் அக்கோவில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம்மலை எங்கே இருந்தது என்பது குறித்து இரு கருத்துகள் உள்ளன. இன்று பூசப்பட்டு விளங்குகின்ற குவிமாடத்தின் கீழே உள்ள பாறை இருக்கும் இடத்தில் சாலமோன் கோவிலின் கற்பீடம் இருந்தது என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்துப்படி, சாலமோன் கோவிலின் திருத் தூயகம் மேற்கூறிய பாறையின் மேல் அமைந்திருந்தது.
 
அண்மையில் இன்னொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாலமோன் கோவில் பாறைக் குவிமாடத்திற்கும் பூசப்பட்ட குவிமாடத்திற்கும் இடையே இருந்திருக்கலாம்.<ref>[http://www.meridianmagazine.com/sci_rel/080815temple.html New Proposed Location for Solomon's Temple]</ref>
[[File:SolomonsTemple.png|thumb|right|300px|விவிலிய அடிப்படையில் சாலமோனின் கோவில் தோற்ற வரைவு.]]
==ஆதாரங்கள்==
{{reflistReflist|2}}
 
[[பகுப்பு:யூதம்]]
"https://ta.wikipedia.org/wiki/சாலமோனின்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது