"மலைவலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
{{தரமுயர்த்து}}
பக்தர்களால் திருவண்ணாமலைத் திருத்தலத்தின் மலை பக்தியோடு சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வானது '''மலைவலம்''' அல்லது '''கிரிவலம்''' எனப்படும். புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை [[திருவண்ணாமலை]]க்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர்.
 
கிரி என்றால் [[மலை]]; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.
 
==மலையின் அமைப்பு==
 
அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
அவைகள்
#. இந்திர லிங்கம்,
#. அக்னி லிங்கம்,
#. எம லிங்கம்,
#. நிருதி லிங்கம்,
#. வருன லிங்கம்,
#. வாயு லிங்கம்,
#. குபேர லிங்கம், மற்றும்
#. ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.
 
ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன
9,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/915054" இருந்து மீள்விக்கப்பட்டது