பிலிப்பு தெ மெல்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
'''பிலிப்பு தெ மெல்லோ''' (''Philip de Melho'') ([[ஏப்ரல் 27]], [[1723]] - [[ஆகஸ்ட் 10]], [[1790]]) [[கொழும்பு|கொழும்பில்]] பிறந்த [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]]த் [[தமிழ்]] அறிஞர். [[எபிரேய மொழி|எபிரேயு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[இலத்தீன்]], [[போர்த்துக்கீச மொழி|போர்த்துக்கீசம்]], தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் வேதசாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்தேர்ந்தவர்.
 
கிறிஸ்தவக் குருவானவராக ஆகும் முன்னரே இவர் சத்திய [[பரிசுத்த வேதாகமம்|வேதாகமத்தை]]த் தமிழிலே மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். [[1753]] இல் [[இலங்கை]]யின் [[வட மாகாணம்|வட மாகாணக்]] குரவராய் நியமனம் பெற்று [[யாழ்ப்பாணம்]] வந்தார். [[1759]] ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதும் இலங்கையில் அச்சிடப்பட்டது. இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் சில பாகங்களையும் மொழிபெயர்த்தார். அத்துடன் [[சூடாமணி]] நிகண்டு 2ஆம் தொகுதிக்கு அனுபந்தமாக 20 உவமைப் பாட்டுகளைப் பாடிச் சேர்த்தார். இவை ''மெல்லோ பாதிரியாரால் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள்'' என்ற பெயரில் [[மானிப்பாய்|மானிப்பாயில்]] அச்சிடப்பட்ட நிகண்டுடன் சேர்ந்திருக்கின்றன. 12வது தொகுதியோடு நூறு பாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும் பாடியிருக்கிறார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பு_தெ_மெல்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது