ஓவியர் ஜீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளை '''ஜீவனின்ஓவியர் ஜீவன்''' ஓவியங்கள்போரும் பலவன்முறையும் காட்சிப்படுத்துகின்றன.ஏற்படுத்தும் மௌனமும்தீவிர அச்சமும்உணர்வுப் சூழ்கிறபதிவுகளைப் வேளைபிரதிபலிக்கும் ஓவிய[[ஓவியக் வெளிப்பாடுகலை|ஓவியங்களை]] மட்டுமேவரைபவர். அவரது எதிர்ப்புக் குரலாக அமைகிறது.இவர் இலங்கையிலும் [[கனடா|கனடாவிலும்]] பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் ஜீவன்.
 
கனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரியும் ஜீவன் [[இலங்கை]]யில் இருந்த காலத்தில் [[மொறட்டுவப் பல்கலைக்கழகம்|மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில்]] கட்டடக் கலைத்துறையில் பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம்பெயர்ந்ததிலிருந்து ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை.
 
[[ரொறன்ரோ]]வில் Funcky Raat அமைப்பினரின் 'தெற்காசியக் கலை இரவு' மற்றும் Desh Pardesh அமைப்பினரின் 'Desh Pardesh 94' ஆகிய நிகழ்வுகளில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடா நோவா ஸ்காசியா (Nova Scotia)வில் தொலைக்காட்சியில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜாக்குலீன் வார்லோ (Jacqueline Warlow) The Strongest Voice is Yours என்னும் நிகழ்வில் இவரது ஓவியங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.
 
'உயிர் நிழல் (பிரான்ஸ்)', 'தூண்டில் (ஜேர்மனி)', 'மனிதம்(சுவிஸ்)', 'கனவு(இந்தியா)', 'சுவர் (இலங்கை)', 'தோழி (இலங்கை)', 'சமர்(பாரிஸ்)' உட்படப் பல கலை இலக்கிய சஞ்சிகைகளும் இவரது ஓவியங்களைப் பிரசுரித்துள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.nandakandasamy.com அவருடைய ஓவியங்களைப் பார்வையிட]
* [http://www.geotamil.com/pathivukal/STORY_geevan.htmlஓவியர் ஜீவன் - ஓர் அறிமுகம்]
 
 
[[பகுப்பு:ஓவியர்கள்]]
[[பகுப்பு:தமிழ் ஓவியர்கள்]]
[[பகுப்பு:கனேடியத் தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓவியர்_ஜீவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது