திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரைதிருத்தம்
சி உரைதிருத்தம் - விக்கியாக்கம் - குறுந்தகடு
வரிசை 15:
==கிறித்தவ ஓவியம் தோன்றல்==
[[Image:St. Theodor.jpg|thumb|200px|புனித தியடோர். அரிய நிறக்கல் திருவோவியம். காலம்: கிபி 900. காப்பிடம்: ப்ரெஸ்லாவ், புல்கேரியா.]]
"கிறித்தவக்" கலை பற்றிய முதல் குறிப்புகள் பண்டைய கிறித்தவ அறிஞர்களான தெர்த்தூல்லியன் (கிபி சுமார் 160-220), அலெக்சாந்திரியா கிளமெண்ட் (கிபி சுமார் 150-212) ஆகியோரின் நூல்களிள் காணக்கிடக்கின்றன. கிறித்தவ [[நற்கருணை|நற்கருணைக்]] கொண்டாட்டத்தின் போது பயன்படுத்திய கிண்ணத்தில் "நல்ல ஆயர்" உருவம் இயேசுவின் அடையாளமாக வரையப்பட்டதைத் தெர்த்தூல்லியன் குறிப்பிடுகிறார்.<ref>Tertullian, ''On Modesty," 7:1-4</ref> கிரேக்க சமய-கலாச்சார வழக்கப்படி, [[ஹெர்மீஸ்]] என்னும் கடவுளை "ஆட்டைச் சுமக்கும் ஆயராக" சித்தரிப்பது வழக்கம்.
 
புனித கிளமெண்ட், அக்காலக் கிறித்தவர்கள் ஆவணங்களில் அடையாளம் இடப் பயன்படுத்திய முத்திரை மோதிரங்களில் கிறித்தவ அடையாளங்களாக புறா, மீன், புயலை எதிர்த்துச் செல்லும் கப்பல், யாழ், நங்கூரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்றார். சிலைகளின் சாயல் ஏற்கத்தக்கனவல்ல, ஏனென்றால் கடவுளுக்குச் சிலை எழுப்புவது யூத மரபுப்படி தடைசெய்யப்பட்டிருந்தது. வாள், வில் போன்ற அடையாளங்கள் தடைசெய்யப்பட்டன, ஏனென்றால் கிறித்தவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது. மதுக்கிண்ணம் அடையாளமும் கிறித்தவர்களுக்கு உகந்ததல்ல.<ref>St. Clement of Alexandria, ''The Pedagogue'', 3.59.2-3.60</ref>
வரிசை 77:
==புனித லூக்கா எழுதிய அன்னை மரியா ஓவியம்==
[[Image:Vladimirskaya.jpg|thumb|left|[[லூக்கா (நற்செய்தியாளர்)|புனித லூக்கா]] வரைந்ததாகக் கருதப்படும் விளாடிமீர் நகர மரியா திருவோவியம்]]
இயேசுவின் வாழ்க்கையையும் போதனையையும் எடுத்துரைக்கின்ற நான்கு [[நற்செய்தி]] நூல்களில்நூல்களுள் ஒன்றின் ஆசிரியர் [[லூக்கா நற்செய்தி|புனித லூக்கா]]. அவரே [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலுக்கும் ஆசிரியர். இவர் திருத்தூதராகிய [[பவுல் (திருத்தூதர்)|புனித பவுலின்]] உடனுழைப்பாளராகச் சென்று நற்செய்தி பரப்பினார். தம் நற்செய்தி நூலில் [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவைப்]] பற்றி இவர் பல தகவல்களைத் தருகின்றார்.
 
[[லூக்கா (நற்செய்தியாளர்)|புனித லூக்கா]] அன்னை மரியாவை நேரடியாகப் பார்த்து, அவரின் திருவோவியத்தை வரைந்தார் என்னும் உறுதியான ஒரு மரபுச் செய்தி உள்ளது. இம்மரபுச் செய்தி கிபி 5ஆம் நூற்றாண்டில் எழுந்தது.
வரிசை 85:
மார்கரீத்தா குவார்தூச்சி (Margherita Guarducci) என்னும் தொல்பொருள் ஆய்வாளர், மேலே குறிக்கப்பட்ட "இறைவனின் அன்னை" திருவோவியம் வட்ட வடிவில் இருந்தது என்றும், அதில் [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவின்]] முகம் மட்டுமே வரையப்பட்டிருந்தது என்றும் ஒரு மரபு உள்ளதைக் குறிப்பிடுகிறார். அத்திருவோவியம் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளை]] வந்தடைந்ததும், அங்கு மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டது என்றும், இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியமே பிற்காலத்தில் Hodegetria ([இயேசுவிடம் செல்ல] "வழிகாட்டுபவர்") என்னும் பெயர் கொண்ட அன்னையின் திருவோவியமாக வணங்கப்படலாயிற்று என்றும் அம்மரபு கூறுகிறது.
 
அறிஞர் குவார்தூச்சி இன்னொரு மரபையும் குறிப்பிட்டுள்ளார். கிபி 1261இல் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளின்]] கடைசி மன்னர் இரண்டாம் பால்ட்வின் அந்நகரை விட்டுச் சென்றபோது மேற்கூறிய [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவின்]] கூட்டுத் திருவோவியத்தின் வட்டவடிவிலான முகப்பகுதியை மட்டும் தம்மோடு எடுத்துச் சென்றாராம். அது அங்கேவின் (Angevin) என்னும் அரச குடும்பத்தின் உடைமையாக இருந்ததாம். பின்னர், காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழ்ந்ததுபோல மீண்டும் ஒருமுறை, [[மரியா (இயேசுவின் தாய்)|மரியா]] தம் குழந்தை [[இயேசு|இயேசுவைக்]] கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டதாம். இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியம் "மோந்தேவேர்ஜினே" (Montevergine) என்னும் இத்தாலிய நகரில் அமைந்துள்ள அன்னை மரியாவின் பெருங்கோவிலில்<ref>[http://en.wikipedia.org/wiki/Montevergine மோந்தேவேர்ஜினே மரியா கோவில்]</ref> மக்களால் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது<ref>[http://www.avellinomagazine.it/foto%20home%20page/madonna.jpg AvellinoMagazine.it]</ref><ref>[http://www.mariadinazareth.it/www2005/Apparizioni/Montevergine4.jpg Mariadinazareth.it]</ref>
 
மோந்தேவேர்ஜினே கோவிலில் உள்ள திருவோவியம் கடந்த நூற்றாண்டுகளில் பலமுறை மீண்டும் மீண்டும் வரையப்பட்டதால், [[லூக்கா நற்செய்தி|புனித லூக்காவால்]] வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியாவின் முகத்தின் அசல் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை வரையறுக்க இயலவில்லை.
வரிசை 99:
*கருப்பு அன்னை மரியா திருவோவியம் (Black Madonna of Częstochowa)<ref>[http://en.wikipedia.org/wiki/Black_Madonna_of_Cz%C4%99stochowa கருப்பு அன்னை மரியா]</ref>
 
===சென்னையில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மரியா திருவோவியம்===
 
ஐரோப்பாவின் பல பகுதிகளில் புனித லூக்கா வரைந்ததாக மரியா திருவோவியங்கள் பல இருந்தாலும், [[இந்தியா|இந்தியாவில்]] [[சென்னை]] நகரில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மிகப் பழைய மரியா திருவோவியம் ஒன்று உள்ளது. அது [[லூக்கா நற்செய்தி|புனித லூக்காவால்]] வரையப்பட்டது என்றும், [[இயேசு|இயேசுவின்]] திருத்தூதர்களுள் ஒருவராகிய [[தோமா (திருத்தூதர்)|புனித தோமாவால்]] இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு மரபு உண்டு<ref>[http://en.wikipedia.org/wiki/Saint_thomas_mount#cite_note-0 புனித தோமையார் மலை மரியா திருவோவியம்]</ref>
 
===எத்தியோப்பியாவில் திருவோவியங்கள்===
வரிசை 109:
==மனிதரால் வரையப்படாத திருவோவியங்கள் பற்றிய மரபு==
 
சில திருவோவியங்கள் மனிதரால் வரையப்படாமல், இறையருளால் அதிசயமாகத் தோன்றின என்றொரு மரபு உள்ளது. இவ்வகை ஓவியங்கள் [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியி்ல்]] "ஆக்கைரோப்போயேத்தா" (αχειροποίητα = acheiropoieta) என்று அழைக்கப்படுகின்றன. இச்சொல்லின் நேரடிப் பொருள் "கையால் செய்யப்படாத" என்பதாகும். கடவுளைச் சார்ந்தவற்றை மனிதர் முழுமையாக எடுத்துரைப்பது கடினம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில், மனிதரால் வரையப்படாதவை என்னும் திருவோவியங்கள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவை ஆயின. அவை மீபொருளாகவும் (relic) கருதப்பட்டன. அத்தகைய ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு பிற ஓவியங்கள் எழுதப்பட்டன.
 
"கையால் செய்யப்படாத" திருவோவியங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கீழ்வருவனவற்றை கூறலாம்:
வரிசை 118:
==திருவோவியங்கள் கூறும் இறையியல்==
 
கிறித்தவ மரபில் திருவோவியங்கள் ஆழ்ந்த [[இறையியல்]] உண்மைகளை உள்ளடக்கியிருப்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். [[கிறித்தவம்|கிறித்தவ]] நம்பிக்கைப்படி, கடவுள் மனிதர் மேல் கொண்ட பேரன்பினால் மனிதராகப் பிறந்து, மனிதரோடு மனிதராக வாழ்ந்து, சிலுவையில் உயிர்துறந்து மனிதரைப் பாவங்களிலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு நிறைவாழ்வைப் பெற்றுத் தந்தார். இவ்வாறு மனிதராகப் பிறந்தவர் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய திருமகனே என்றும், அவரே [[மரியா (இயேசுவின் தாய்)|கன்னி மரியாவின்]] வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருவாக உருவாகி மனிதரானவர்மனிதரான [[இயேசு]] என்றும் [[கிறித்தவம்]] நம்புகிறது.
 
[[யோவான் நற்செய்தி]] கூறுவதுபோல,
வரிசை 129:
 
[[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] என்னும் விவிலிய நூல்,
{{cquote|நானே உன் கடவுளாகிய ஆண்டவர்...மேலே விண்விளியில்விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்}}
என்றுரைக்கிறது (விப 20:1-5).
 
வரிசை 144:
எனவே, கிரேக்க கலாச்சாரத்தில் வேரூன்றிய கீழைக் கிறித்தவம் கடவுள் சார்ந்தவற்றை மனித கலையில் வெளிப்படுத்த முப்பரிமாணச் சிலைகள் செதுக்குவது சரியல்லவென்றும், இரு பரிமாணத் திருவோவியங்கள் ஏற்புடையனவென்றும் முடிவுசெய்தது.
 
மேலைப் பகுதியில் வேரூன்றிய [[கிறித்தவம்]] இவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அங்கு, ஓவியங்களும் ஏற்கப்பட்டன, திருச்சிலைகளும் ஏற்கப்பட்டன. இரு பரிமாணக் கலையும் சரி, முப்பரிமாணக் கலையும் சரி, அவை கடவுள் சார்ந்தவற்றை மனித முறையில் எடுத்துரைக்க பொருத்தமானவையே என்னும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. படைப்புப் பொருள்கள் வழியாகக் கடவுளின் பெருமையை மனிதர் ஓரளவுக்கு வெளிப்படுத்த முடியும் என்பதும், படைப்புப் பொருளிலிருந்து, படைத்தவரைக் கண்டு அவருக்கே வணக்கம் செலுத்துவது தகுமே என்பதும் மேலைத் திருச்சபையின் அணுகுமுறை ஆயிற்று.
 
கீழைத் திருச்சபையில் பிசான்சியக் கலை (Byzantine art) திருவோவியக் கலையாக வளர்ந்தது. அந்த ஓவியங்களில் தெய்விக அம்சமும் புனிதத் தன்மையும் அழுத்தம் பெற்றன. மனித வலுவின்மையும் புலன் கூறுகளும் அழுத்தம் பெறவில்லை. கிறித்தவக் குறியீடுகள் (symbols) மூலமாகத் திருவோவியங்கள் ஆழ்ந்த மறையுண்மைகளை மிக எளிய முறையில் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு, [[இறையியல்|இறையியலில்]] தனித் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் கிறித்தவ சமய உண்மைகளைப் புகட்டும் கருவியாகத் திருவோவியங்கள் அமைந்தன.
வரிசை 158:
[[இயேசு|இயேசுவைச்]] சித்தரித்த பண்டைய ஓவியங்கள் பொதுப் பாணியில் இருந்தன. அவற்றில் இயேசு இளமைப் பருவத்தினராக சித்தரிக்கப்பட்டார். அவருக்குத் தாடி இருக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் இயேசுவை நீண்ட முடியுடையவராக, தாடியுடையவராக சித்தரிக்கும் பாணி இறுகிய முறையிலான பாணியாக மாறியது.
 
இயேசுவும் மரியாவும் உண்மையிலேயே எவ்வாறு தோற்றமளித்தனர் என்பது யாருக்கும் தெரியாது என்று [[ஹிப்போவின் அகஸ்டீன்|புனித அகுஸ்தீன்]] கூறியதை இவண் கருதலாம்.<ref>St. Augustine, ''De Trinitatis'' 8:4-5.</ref>ஆனால் அகுஸ்தீன் [[இயேசு]] பிறந்து, வளர்ந்த [[திருநாடு|திருநாட்டில்]] வாழ்ந்தவரல்ல. எனவே, அப்பகுதி மக்களின் பழக்கங்களையும் வாய்மொழி மரபுகளையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
இயேசுவைச் சித்தரித்த ஆளோவியம் முதலில் ஒரே பாணியில் இருக்கவில்லை. செமித்திய பாணி இயேசுவைச் சிறிது சுருள்முடி கொண்டவராகச் சித்தரித்தது. கிரேக்க பாணி இயேசுவைத் தாடியுடையவராகவும், (கிரேக்க கடவுள் [[சூசு|சூஸ்]] போல) தலையில் நடுப்பகுதி வகிடு கொண்டவராகவும் சித்தரித்தது. இவற்றுள், சிறிது சுருள்முடி கொண்ட [[இயேசு]] ஓவியமே தத்ரூபமானதுமிக இயல்பானது என்று பண்டைக்கால எழுத்தாளர் தெயதோருஸ் லெக்டோர் என்பவர் கூறினார்<ref>Theodorus Lector, ''Church History 1:15.</ref>அவர் கூறிய ஒரு வரலாற்று நிகழ்ச்சியை [[தமாஸ்கஸ் நகர யோவான்|புனித தமஸ்கு யோவான்]] என்னும் மற்றொரு எழுத்தாளர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: கிரேக்க மதத்தைச் சார்ந்த ஓர் ஓவியரிடம் இயேசுவின் படத்தை வரையச் சொன்னபோது அவர் இயேசுவுக்குத் தாடியும், தலையில் நடு வகிடும் வைத்து வரைந்தாராம். அதற்குத் தண்டனை போல, அவரது கைகள் சூம்பிப்போயினவாம்.
 
கிறித்தவத் திருவோவியங்கள் திருச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது 6ஆம் நூற்றாண்டில்தான் என்று தெரிகிறது.<ref>Belting, ''Likeness and Presence'', [[University of Chicago Press]], 1994.</ref> அவை வழிபாட்டின்போது பயன்படுத்தப்பட்டன. அவை புதுமைகள் புரிந்ததாகவும் மக்கள் ஏற்றனர்.<ref>Patricia Karlin-Hayter, The Oxford History of Byzantium, Oxford, 2002.</ref> 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, திருவோவியங்கள் புரிந்த புதுமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.<ref>Mango, ''The Art of the Byzantine Empire 312-1453'', [[University of Toronto Press]], 1986.</ref>
வரிசை 174:
[[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளை]] மையமாகக் கொண்டிருந்த பிசான்சியப் பேரரசின் ஆட்சியாளர்கள்<ref>[http://en.wikipedia.org/wiki/Byzantine_Empire பிசான்சியப் பேரரசு]</ref> திருவோவியங்களின் பயன்பாடு பற்றி 8ஆம் நூற்றாண்டளவில் கேள்விகள் எழுப்பினர். [[யூதம்]], [[இசுலாம்]] ஆகிய சமயங்கள் தம் வழிபாடுகளில் திருவோவியங்களைப் பயன்படுத்தவில்லை; கடவுள் சார்ந்தவற்றை மனிதர் ஓவியங்கள் மற்றும் சிலைகள் வழியாக வெளிப்படுத்துவது "சிலை வழிபாடு" என்று அம்மதங்கள் கருதின. எனவே, பிசான்சியத்தில் திருவோவியங்களுக்கு எதிர்ப்பு எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் யூதமும் இசுலாமுமே என்று சிலர் முடிவுக்கு வந்தனர். ஆனால் இம்முடிவு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என அறிஞர் கருதுகின்றனர்.<ref>Pelikan, ''The Spirit of Eastern Christendom''</ref>
 
கிபி 726-730 காலத்தில் பிசான்சிய பேரரசர் மூன்றாம் லியோ (ஆட்சிக்காலம்: 717-741)திருவோவியங்கள் வணக்கத்திற்குத் தடை விதித்தார். பல நூற்றாண்டுகளாக மக்களிடையே பிரபல்யமாகவிரிவாகப் இருந்தபரவியிருந்த திருவோவிய வணக்கத்தை லியோ தடை செய்தது மக்களிடையே பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது.
 
லியோ இயற்றிய திருவோவிய வணக்க சட்டத்திற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு இருந்தது. திருச்சபைத் தலைவர்கள் சிலரும் ஆதரவு அளித்தனர். ஆனால் மிகப் பெரும்பான்மையான கிறித்தவ இறையியலாரும், துறவியரும் ஆயர்களும் அரச ஆணையைத் தீவிரமாக எதிர்த்தனர். பேரரசின் மேற்குப் பகுதிகள் அரச ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தன.
வரிசை 184:
இதற்கு எதிர்ப்பாக பேரரசர் லியோ தென் இத்தாலியையும் இல்லீரிக்கம் பகுதியையும் உரோமை மறைமாவட்டத்திலிருந்து பிரித்து, காண்ஸ்டாண்டிநோபுள் மறைமாவட்டத்தின் கீழ் இடம் மாற்றினார்.
 
அதே நேரத்தில் நடு இத்தாலியில் ரவேன்னா நகரில் மக்கள் ஆயுதம் தாங்கியதாங்கி கலவரத்தில் கலவரம்ஈடுபட்டனர் எழுந்தது(கிபி 727). கலவரத்தை அடக்க லியோ கடற்படையை அனுப்பினார். ஆனால் புயலில் சிக்கிய கப்பல்கள் ரவேன்னா சென்றடைய இயலவில்லை.<ref>Treadgold. ''History of the Byzantine State'', pp. 354–355.</ref>
 
தென் இத்தாலியில் திருவோவிய வணக்கம் அரச ஆணையை மீறி தொடர்ந்து நடந்தது. ரவேன்னா பகுதியும் பேரரசிலிருந்து விடுதலை பெற்றதாகச் செயல்படலாயிற்று.
வரிசை 196:
==திருவோவியங்களில் உள்ள குறியீடுகளுக்கு விளக்கம்==
 
பிசான்சியத்தில் உருவாக்கப்பட்ட திருவோவியங்கள் 11ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பிற்பட்ட காலத்தையும் சார்ந்தவை. இதற்கு முக்கிய காரணம் திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்த 8-9 நூற்றாண்டுக் காலத்தில் நூற்றுக்கணக்கான திருவோவியங்கள் அடித்து நொறுக்கப்பட்டதே ஆகும். மேலும் 1204இல் நான்காம் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போரின்]] போது [[வெனிசு]] நாட்டவர் பல கலைப் பொருள்களைக் கவர்ந்து சென்றுவிட்டனர். 1453இல் [[காண்ஸ்டாண்டிநோபுள்]] நகரம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது.
 
திருவோவிய வணக்கம் 11-12 நூற்றாண்டுகளில் ஆழமாக வேரூன்றியது. திருவோவியங்களை வணக்கத்திற்கு வைப்பதற்கென்று ஒரு தனித் திரை அறிமுகம் செய்யப்பட்டதும் இதற்குக் காரணம் ஆகும். அக்காலத் திருவோவியங்கள் மிகவும் இறுக்கமான பாணியில் எழுதப்பட்டன.
வரிசை 202:
அதன் பிறகு எழுதப்பட்ட திருவோவியங்களில் உணர்ச்சி வெளிப்பாடு அதிகம் தோன்றுகிறது. ஆழ்ந்த ஆன்மிக உணர்வும் தெரிகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆத்தோஸ் மலையில் அமைந்த துறவற இல்லத்தில் உள்ள "விளாடிமீர் இறையன்னை" என்னும் மரியா திருவோவியத்தைக் கூறலாம் (காண்க: படிமம்).
 
1261இல் தொடங்கிய பலயோலகஸ் காலத்திலும்மன்னரின் ஆட்சிக்காலத்திலும் மேற்கூறிய உணர்ச்சி நிறைந்த திருவோவியங்கள் உருவாக்கும் பணி தொடர்ந்தது.
 
14ஆம் நூற்றாண்டில் திருவோவியங்களில் உள்ள உருவங்கள் நீண்ட முறையில் எழுதப்பட்டன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு "ஓக்ரித் மரியா இறைவாழ்த்து ஓவியம்" ஆகும்.
வரிசை 209:
திருவோவியங்களில் காணப்படும் ஒவ்வொரு கூறும் ஒரு குறியீடு ஆகும். எனவே, ஒவ்வொரு கூறும் ஒரு பொருள் கொண்டதாக அமைகிறது.
 
*[[இயேசு கிறித்து]], [[மரியா (இயேசுவின் தாய்)|மரியா]], [[புனிதர்|புனிதர்கள்]], [[வானதூதர்|வானதூதர்கள்]] ஆகியோருக்கு எப்போதும் தலைப் பகுதியில் "ஒளிவட்டம்" (halo) இருக்கும்.
*வானதூதர்களுக்கு எப்போதுமே சிறகுகள் இருக்கும். சில வேளைகளில் [[திருமுழுக்கு யோவான்|திருமுழுக்கு யோவானுக்கும்]] சிறகு உண்டு. அவர்கள் "தூதுவர்கள்" என்பதால் இக்கூறு உளது.
*முகச் சாயல் எப்போதுமே ஒரே பாணியில் இருக்கும்.
*உடல் நிலைகள் (இருத்தல், நிற்றல், முழந்தாட்படியிடுதல், பறத்தல் போன்றவை) தரப்படுத்தப்பட்டிருக்கும்.
வரிசை 216:
*சிவப்பு நிறம் இறைவாழ்வைக் குறிக்கும்.
*நீல நிறம் மனித வாழ்வு, மனித நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.
*வெள்ளை நிறம் கடவுளின் உள் ஆழத்தின் தன்மையைக் குறிக்கும். இது [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]], உருமாற்றம் போன்ற திருவோவியங்களில் உண்டு.
*[[இயேசு]] மற்றும் [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவின்]] திருவோவியத்தில் சில சிறப்புப் பண்புகள் உண்டு. இயேசுவின் உள்ளாடை சிவப்பாகவும் வெளியாடை நீலமாகவும். இருக்கும். அதன் பொருள், "கடவுளாக இருந்தவர் மனிதராக மாறினார்" என்பதாகும்.
*மரியா திருவோவியத்தில் மரியா நீல உள்ளாடையும் சிவப்பு வெளியாடையையும். அணிந்திருப்பார். அதன் பொருள் "மனிதப் பிறவியாகிய மரியாவுக்குக் கடவுள் தெய்விகக் கொடைகளை அளித்துள்ளார்" என்பதாகும்.
*இவ்விதத்தில், கடவுள் மனிதரை அன்புசெய்து, அவர்களுக்குத் தம் அருள்கொடைகளை வழங்கி, அவர்களைத் தெய்விக நிலைக்கு உயர்த்துகிறார் என்னும் உண்மை திருவோவியம் வழியாக அறிவிக்கப்படுகிறது.
*திருவோவியங்களில் காணப்படும் (கிரேக்க) எழுத்துகளுக்கும் பொருள் உண்டு. பல திருவோவியங்களில் அவற்றில் வரும் ஆள்கள்/நிகழ்ச்சிகளின் பெயர்கள் முழுதுமாக அல்லது சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும்.
 
==ஆதாரங்கள்==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது