கலிங்கு என்பது கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் நீரை முறைப்படுத்தி வெளியேற்றுவதற்குக் கற்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் ஒரு கட்டுமானம் ஆகும். இது கலிங்கல், கலிஞ்சு என்றும் வழங்கப்படுகிறது. வரிசையாக குத்துக்கற்களை ஊன்றி அவற்றின் இடையே உள்ளே சீரான இடைவெளிகளில் பலகைகளையோ, மணல்மூட்டையையோ வைத்தும், எடுத்தும் நீர் வெளியேறும் அளவு ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள கண்மாய் ஒன்றில் அமைந்துள்ள கலிங்கு. வரத்துக் கால்வாயிலேயே இது அமைந்திருப்பதால் கண்மாய் நிரம்பும் முன்பே அடுத்தடுத்த கண்மாய்களுக்கு நீரைப் பங்கீடு செய்ய முடியும்
மதுரை மாவட்டத்திலுள்ள கண்மாய் ஒன்றில் அமைந்துள்ள கலிங்கு. கண்மாய் நிரம்பிய பிறகு மறுகால் பாயுமாறு அமைக்கப்பட்டுள்ளது

சில கண்மாய்களில் வரத்துக் கால்வாய்ப் பகுதியிலேயே கலிங்கு அமைந்திருப்பதால் அடுத்தடுத்த நீர்நிலைகளுக்கும் நீரைத் திருப்பிவிட்டுப் பங்கீடு செய்வதற்கு ஏதுவாக இருக்கும். வேறு சிலவற்றில் கண்மாய் நிரம்பிய பிறகே மறுகால் பாயுமாறு கலிங்கு அமைந்திருக்கும்.[1]

தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஊராட்சி அமைப்புகள் இருந்திருப்பதும், அத்தகைய அமைப்புகளில் மதகுகள், கால்வாய்களை ஏற்படுத்துவதற்கும், மேலாண்மை செய்வதற்கும் என்றே "கலிங்கு வாரியம்" என்ற குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதும் கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிய வருகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கு&oldid=2747486" இலிருந்து மீள்விக்கப்பட்டது