திட்ட புவியீர்ப்பு முடுக்கம்

திட்ட புவியீர்ப்பு முடுக்கம் (Standard Gravity) என்பது புவிக்கு அருகாமையில், விண்ணில் இருக்கும் ஒரு பொருளின் மீது புவியீர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கம் ஆகும். இது பொதுவாக ɡ0 என்று குறிக்கப்படுகிறது. திட்ட அளவுமுறைமைகளின்படி 9.80665 m/s2 என்று கொள்ளப்படுகிறது.[1][2] புவியின் ஒவ்வொரு இடத்திலும் அவ்விடத்தின் அமைவைப் பொறுத்து புவியீர்ப்பு முடுக்கம் மாறும்; ஆகையால் இதுவே திட்ட அளவாக கணக்கீடுகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது புவியின் ஆரத்தைக் கொண்டு கணக்கிடப்படுவதால் பூமத்திய ரேகை பகுதிகளில் அதிகமாகவும், துருவப் பகுதிகளில் குறைவாகவும் இருக்கும். புவியின் மேற்பரப்பில் புவியீர்ப்பு முடுக்கம் அதிகபட்சமாக உள்ளது. புவியின் மேற்பரப்பிலிருந்து மேலேயோ அல்லது கீழேயோ செல்லச்செல்ல புவியீர்ப்பு முடுக்கம் குறைகிறது.

உசாத்துணைகள் தொகு