வண்ணப்படிவுப் பிரிகை

வண்ணப்படிவுப் பிரிகை (chromatography) என்பது கலவைகளைப் பிரிப்பதற்கான ஒரு வகை தொழில்நுட்பத்தின் பொதுவான பதமாகும்.

பச்சையத்தின் (chlorophyll) வண்ணப்படிவுப் பிரிகை

வரலாறு தொகு

உயிருள்ள திசுக்களின் வேதியியல் பண்புகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யும்போது திசுக்களில் ஏராளமான சேர்மங்கள் இருப்பதும், அவற்றில் பல ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டிருப்பதும் பெருத்த இடைஞ்சல்கள். அந்தச் சேர்மங்களைத் தனித்தனியாகப் பிரிப்பது மிகவும் கடினம். உதாரணமாக, இலைகளில் ஒரே மாதிரியான பண்புகளுள்ள நிறமிச் சேர்மங்கள் பல உள்ளன. அவற்றை தனித்தனியாகப் பிரிக்கவும் அவற்றின் பண்புகளைக் கண்டுபிடிக்கவும் முடியாமல் இருந்தது. இந்த சிக்கலைத் தீர்க்க மைக்கேல் ஸ்வெட் (Mikhail Tsvet) என்ற ரஷ்யத் தாவரவியல் நிபுணர் 1900 இல் ஒரு வழி கண்டுபிடித்தார்.[1] அவர் இழைகளிலுள்ள நிறமிச் சேர்மங்களின் கலவையை எடுத்து அவற்றைப் பெட்ரோலியம் ஈதர் திரவத்தில் கரைத்தார். ஒரு நீண்ட கண்ணாடிக் குழலில் சுண்ணாம்புக்கல் பொடியைத் திணித்து வைத்து, அதற்குள் அந்தக் கரைசலை ஊற்றினார். பெட்ரோலியம் ஈதர் சுண்ணாம்புக்கல் பொடிகளைத் கடந்து போய்விட்டது. ஆனால் நிறமிச் சேர்மங்கள் பொடித் துகள்களில் ஒட்டிக் கொண்டு பின் தங்கிவிட்டன. அதன் பிறகு அவர் அந்தக் குழாய்க்குள் மேலும் பெட்ரோலிய ஈதரை ஊற்றிக் கொண்டிருந்தார். நிறமிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கின. அவற்றில் வெவ்வேறு நிறமிச் சேர்மங்கள் வெவ்வேறு வேகங்களிலிறங்கின. ஒவ்வொரு நிறமிச் சேர்மும் சுண்ணாம்புக் கல் பொடியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற உறுதி, அது பெட்ரோலிய ஈதரில் கரைகிற திறமை ஆகியவற்றைப் பொறுத்து இந்த வேகம் அமைந்தது. இதன் காரணமாக வெவ்வேறு நிறமிச் சேர்மங்கள் தனித்தனியான வளையங்களாய்ப் பிரிந்து நின்றன. இவ்வாறு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் பல வளையங்கள் தோன்றின. இதன் காரணமாக ஸ்வெட் இந்த உத்திக்கு வண்ணப்படிவுப் பிரிகை எனப் பொருள்படுகிற குரோமடோகிராபி (chromatography) என்று பெயரை அளித்தார்.

 
1.மூடி 2. காகிதம் 3... 4. கரைசல் (காகித வண்ணப்படிவுப் பிரிகை வரைபடம்

மிகவும் உபயோகமாக இருந்த இந்த உத்தியில் பல மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. குழல்களில் சுண்ணாம்புக்கல் பொடிக்குப் பதிலாக இன்னும் அதிகச் செயல் திறனுள்ள பொடிகள் நிரப்பட்டன. சாதாரண மையுறிஞ்சும் தாள்களைக் கூட பயன்படுத்தி வண்ணப்படிவுப் பிரிகை செய்ய முடிந்தது. இப்போது நிறமற்ற சேர்மங்களைப் பிரிக்கவும் இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வண்ணப்படிவுப் பிரிகை என்ற பெயர் மற்றும் மாறவில்லை.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஸவெட்டின் கண்டுபிடிப்பு முதன்முதலாக 1905ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது:
    • Tswett, M. S. (1905) "О новой категории адсорбционных явлений и о применении их к биохимическому анализу" (O novoy kategorii adsorbtsionnykh yavleny i o primenenii ikh k biokkhimicheskomu analizu" (On a new category of adsorption phenomena and on its application to biochemical analysis)), Труды Варшавского общества естествоиспытателей, отделении биологии (Trudy Varshavskago Obshchestva Estestvoispytatelei, Otdelenie Biologii (Proceedings of the Warsaw Society of Naturalists [i.e., natural scientists], Biology Section)), vol. 14, no. 6, pp. 20–39 (Note: Tsvet submitted his manuscript in 1903; however, it was not published until 1905.)
    "chromatogram" என்ற வார்த்தை முதன் முதலில் அச்சில் 1906இல் வெளிவந்த்து: Original : " Wie die Lichtstrahlen im Spektrum, so it is werden in der Calciumkarbonatsäule die verschiedenen Komponenten eines Farbstoffgemisches gesetzmässig auseindergelegt, und lassen sich darin qualitativ und auch quantitativ bestimmen. Ein solches Präparat nenne ich ein Chromatogramm und die entsprechende Methode, die chromatographische Methode."

    Translation : Like light rays in a spectrum, so the different components of a mixture of pigments are dispersed in the calcium carbonate column following a set pattern, and [they] can be determined in there qualitatively as well as quantitatively. I call such a preparation a "chromatogram" and the corresponding method, the "chromatographic method".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணப்படிவுப்_பிரிகை&oldid=3319442" இலிருந்து மீள்விக்கப்பட்டது