சிறப்பு அனுமதி (ஆவணப் படம்)

சிறப்பு அனுமதி (Special Pass) "ஸ்பெசல் பாஸ்" என்பது ஒரு தமிழ்-ஆங்கில ஆவணப் படம் ஆகும். சிங்கப்பூருக்கு செல்லும் தமிழ்த் தொழிலாளர்கள் சந்திக்கும் பல இன்னல்களை இப்படம் விவரிக்கிறது.

கருத்து

தொகு

சிங்கப்பூரில் தற்காலிக வேலை செய்யவென சிறப்பு அனுமதி பெற்ற பல இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்த் தொழிலாளர்கள் வருகிறார்கள். இவர்கள் சமையல், துப்பரவு, கட்டிடவேலை போன்ற மிக கடுமையான வேலைகளைச் செய்ய வருகிறார்கள். இவர்களில் பலர் ஓய்வு அற்ற வேலை, சம்பளம் தரப்படாதல், உள உடல் தாக்குதல் என பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். இந்த இன்னல்கள், அது தொடர்பாக சிங்கப்பூர் அரசு எடுக்கும் நடவடிக்கைகள், அதனால் வழக்குகளில் சிக்கல்பட்டு சிறு, சிறு அறைகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் தொழிலாளர் படும் இக்கட்டான நிலைப் பற்றி இந்த ஆவணப் படம் விவரிக்கிறது.

ஆக்கர்கள்

தொகு

இந்தப் படத்தை சிங்கப்பூர் இளையோர்கள் எடுத்துள்ளார்கள்.

விருதுகள்

தொகு