சிறுவர்களுடனான பாலியல் முறைகேடு

(சிறார் பாலியல் வன்கொடுமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழந்தைகளுடனான பாலுறவு (Child sexual abuse) மாந்தர் ஒருவர் குழந்தைகளுடன் கொள்ளும் பாலுறவு ஆகும். பாலுறவுக்கான அறிவு எட்டப்படாத குழந்தைகளுடன் பாலுறவு கொள்வது, அக்குழந்தைகளின் உடல்நிலை மட்டுமல்லாது மனநிலையையும் பாதிக்கும். இது பாலியல் வன்மம் என்றே சமூகத்தினால் வரையறுக்கப்படுகிறது. இத்தகு மனநிலை ஒரு மனநிலை நோயாக (Pedophilia) வரையறுக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுடனான பாலியல் வன்முறை எனப்படுவது சிறார்களை பாலியல் நடத்தைகளில் பாவிப்பதைக் குறிக்கின்றது. பாலியல் முறையில் தொடுதல், தொடவைத்தல், பாலியல் செயற்பாடுகளில் பயன்படுத்தல், வன்கலவி, பாலியல் உறுப்புகளை அல்லது ஆபாசப் படங்களை காட்டுதல் என பல தரப்பட்ட நடத்தைகள் சிறார் பாலியல் குற்றங்களில் அடங்கும்.

வீட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகளும், குழந்தைத் தொழிலாளர்களும் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள். குழந்தைகளை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்துவதும் இந்த பாலியல் நடவடிக்கைக்குள் அடங்கும். இம்மாதிரியான நடவடிக்கைகள் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

தடுப்புக்கல்வி

தொகு
  • இக்கலவியில் ஈடுபடுவோர் பற்றிய ஆய்வினை நடத்தியவர், இதனைத் தடுக்கு பின்வரும் கல்வியைச் சிறார்களுக்கு கற்றுத்தர சொல்கின்றனர்.
  1. முன்பின் தெரியாதவரிடம் அதிகம் பேசக்கூடாது. பெற்றோர் அறிமுகப்படுத்துவோரிடம் மட்டுமே பேச வேண்டும்.
  2. அவ்வாறு பேசியதை சிறார்கள் கூறும் போது, பொறுமையாகக் கேட்க வேண்டும். உளறுகின்றனர் என்று ஒதுக்கக்கூடாது.
  3. உள்ளாடைகளை பிறர் அணிவிக்க அனுமதிக்கக் கூடாது. அவரவர் உடையை அவரவரே உடுக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  4. உள்ளாடைகள் மூலம் மறைக்கும் உடற்பகுதிகளை பிறர் தொட்டு விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு தொடர்ந்து தொட்டால், பெற்றோரிடம் பயமில்லாமல் சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்.
  5. பெற்றோர் இல்லாமல் வளரும் குழந்தைகளை பாதுகாவலர் / சமூக அக்கறை உள்ளவர் / நாம் கண்காணிக்க வேண்டும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு


புற இணைப்புகள்

தொகு
  • சத்யமேவ ஜெயதே! என்ற காட்சி வானொலி நிகழ்ச்சி மூலம் மிக அதிக அளவில் இந்தியாவில் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.