சிறீபலி பூசை (சைவ சமயம்)
சிறீபலி பூசை என்பது சைவ சமயத்தில் சிவாலயங்களில் உள்ள பலிபீடத்திற்கு செய்யப்படுகின்ற பூசையாகும்.[1] இந்த பூசையை ஸ்ரீவேலி என கேரளத்தில் செய்கிறார்கள். வடமொழியில் ஸ்ரீபலி பூஜை என்று அழைக்கின்றனர்.
பூசைக் காலம்
தொகுஇந்தப் பூசையானது மூன்று சந்திப் பொழுதுகளிலும், அர்த்தயாம பூஜையின்போதும் செய்யப்படுகிறது.[1]
பூசை முறை
தொகுசிவாலயத்தில் உள்ள பலிபீடத்தின் அருகே ஸ்ரீபலி கொள்ளும் தேவர் அல்லது அஸ்த்ரதேவர் என்ற செப்புத்திருமேனிகளை தலையில் சுமந்து கொண்டு ஒரு பூசகர் நிற்பார்.[1] விளக்கு ஏந்திய ஒருவரும், இசைக் கலைஞர்களும், நாட்டியப் பெண்ணும் இருப்பார்கள். பலிபீடத்திற்கு அர்ச்சகர் பூசை செய்யும் போது இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைப்பர், நாட்டியப் பெண் நடனம் ஆடுவார். அர்ச்சகர் அன்னம், நீர், மலர் ஆகியவற்றை பலிபீடத்தில் வைத்து பூசை செய்வார்.[1] நாட்டியப் பெண் ஹஸ்தம் எனும் முத்திரையைக் காட்டியவாறு நடனம் ஆடுவாள்,[1] அர்ச்சகரும் ஹஸ்த முத்திரையை காட்டி பூசை செய்வார். மத்தளம், கரடிகை, வெண்கலத்தாளம், பாடகம், எக்காளம் ஆகிய இசைக்கருவிகள் இந்த பூசையின் போது வாசிக்கப்பட்டதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.[1]
நோக்கம்
தொகுஇறைவனுக்கு மலர், நீர், அன்னம் ஆகியவற்றோடு, இசையும், நடனமும் என அனைத்தையும் அர்ப்பணிக்கும் நிகழ்வாக இந்தப் பூசை அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Dinakaran - எங்கு போயினரோ ஆலய இசைக் கலைஞர்கள்!". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.