சிறீ எசு. இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி (Sri S. Ramaswamy Naidu Memorial College) என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், சத்தூரில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரிக்கு கல்வியாளரும் விடுதலைப்போராட்ட வீரருமான எஸ். ராமசாமி நாயுடு பெயரிடப்பட்டது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியில் வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
வரலாறு
தொகுஇந்த கல்லூரி 1970 ஆம் ஆண்டில் நாகலாபுரத்தில் திரு வி. வேணுகோபால கிருஷ்ணசாமி நாயுடு என்பவரால் நிறுவப்பட்டது. 1972 இல், கல்லூரியானது சாத்தூருக்கு மாற்றப்பட்டது.
குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்
தொகு- அய்யாலுசாமி ராமமூர்த்தி, உயிர் இயற்பியலாளர்