சிறீ பத்மாவதி மகளிர் மருத்துவக் கல்லூரி

சிறீ பத்மாவதி மகளிர் மருத்துவக் கல்லூரி (Sri Padmavathi Medical College for Women) என்பது இந்தியாவில் ஆந்திராவின் திருப்பதியில் உள்ள பெண்களுக்காக மருத்துவக் கல்லூரி ஆகும்.[1] இந்த கல்லூரி சிறீவெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கல்லூரி 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் ஆண்டு தோறும் 150 மாணவர்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்படுகின்றனர்.[2]

சிறீ பத்மாவதி மகளிர் மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவக் கல்லூரி
உருவாக்கம்2014
Parent institution
சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம்
பட்ட மாணவர்கள்150 வருடத்திற்கு
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புசிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம்
இணையதளம்https://svimstpt.ap.nic.in

வரலாறு

தொகு

பெண்களுக்கான சிறீபத்மாவதி மருத்துவக் கல்லூரி 2014ஆம் ஆண்டில் 150 மாணவர்களின் மருத்துவ பட்ட பட்டப்படிப்புக்காக நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மகளிருக்காக நிறுவப்பட்ட இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.

திருப்பதியில் உள்ள சிறீ வெங்கடேசுவரா மருத்துவ நிறுவன வளாகத்தில் இந்த மருத்துவக் கல்லூரியினை நிறுவத் திருத்தப்பட்ட / மறு மதிப்பீடு செய்யப்பட்ட அத்தியாவசியச் சான்றிதழை (டிடி: 17.09.2013) ஆந்திர அரசு 2013ஆம் ஆண்டு வழங்கியது. மேலும், இந்த வளாகத்தில் சுமார் 50 ஏக்கர் நிலத்தைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒதுக்கியது. மேலும் மருத்துவக் கல்லூரி, போதனா மருத்துவமனை, நூலகம் மற்றும் குடியிருப்பு வளாகம் போன்ற வசதிகளை மேம்படுத்த மேலும் 26.2 ஏக்கர் நிலத்தினையும் வழங்கியது.

மருத்துவக் கல்லூரி, போதனா மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள், செவிலியர் கல்லூரி, இயன்முறை சிகிச்சைக் கல்லூரி மற்றும் பிற கட்டிடங்களின் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளன.

துறைகள்

தொகு

இந்த மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல், உடற்கூறியல், உயிர்வேதியியல், உயிர் தகவல்நுட்பவியல், உயிரி தொழில்நுட்பவியல், இருதயவியல்,   இருதய அறுவை சிகிச்சை, சமூக மருத்துவம், பல் அறுவை சிகிச்சை, தோல் நோய், அவசர மருத்துவம், உட்சுரப்பியல், காது மூக்கு தொண்டி மருத்துவம், தடயவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குருதியியல், மருத்துவ புற்றுநோய், மருந்தியல், நுண்ணுயிரியல், சிறுநீரகவியல், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, அணுக்கரு மருத்துவம்,  மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்,   கண் மருத்துவம், எலும்பியல், குழந்தை மருத்துவம், நோயியல், உடலியங்கு இயல், மனநோய், கதிரியக்க மருத்துவம் உள்ளிட்ட துறைகளும் வசதிகளும் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரியில் 1) 5 வருட மருத்துவப் பட்டப்படிப்பும், 2) முதுநிலை 2 வருட இயன்முறை மருத்துவம், 3) முதுநிலை 2 வருட உடற்கூறியல் மற்றும் உடற்செயலியல், 4) முதுநிலை 2 வருட உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் 5) முதுநிலை உயிர்த்தொழில்நுட்பவியல் 6) முதுநிலை தகவல் தொழில்நுட்பவியல் 7) சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு சான்றிதழ் படிப்புகளை மருத்துவம் சார்ந்த துறைகளில் வழங்குகின்றது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "After 2 years, Sri Padmavathi Medical College gets its own building". New Indian Express. 13 July 2017. http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2017/jul/13/after-2-years-sri-padmavathi-medical-college-gets-its-own-building-1627995.html. பார்த்த நாள்: 13 July 2017. 
  2. "SVIMS to conduct its own counselling". The Hindu. 18 June 2016. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/SVIMS-to-conduct-its-own-counselling/article14429756.ece. பார்த்த நாள்: 13 July 2017. 
  3. Staff, Edufever (2020-08-31). "Sri Padmavathi Medical College Tirupati 2021-22: Admission, Course, Fee, Cutoff and More!". Edufever (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.