சிறுநீரியல்
சிறுநீரியல் [1]என்பது மனித உடலில் உள்ள சிறுநீரக செயல்பாட்டை குறித்து படிக்கும் அறிவியல் துறையாகும். இது சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் அதில் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற தகவல்களை விளக்குகின்றன.
சிறுநீரக அமைப்பு
தொகுமனிதனின் உடலில் உள்ள சிறுநீரக அமைப்பு இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தமான இரத்தத்தை வடிகட்டி உடல் உறுப்புகளுக்கு செலுத்துகிறது. நமது சிறுநீரகம் பார்ப்பதற்கு இரண்டு அவரை விதை வடிவில் காணப்படும். இதில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய், சிறுநீரக தமனிகள் மற்றும் சிரைகள் போன்ற பாகங்கள் காணப்படுகின்றன. [2]
சிறுநீரக பிரச்சனைகள்
தொகுசிறுநீரியல் சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் பகுதி, விதைப்பை, சிறுநீர்க் குழாய், ஆணுறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளை ஆராய்கிறது. [3]
சிகிச்சைகள்
தொகுலேபராஸ்கோபி, எண்டோஸ்கோபி மற்றும் கதிரியக்க முறைகள் உள்ளிட்ட அறுவை சிகிச்சை மூலமாகவும், திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும், டயலைஸிஸ் மூலமாகவும் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.
சிறுநீரியல் எதிர்கால முன்னேற்றம்
தொகு- இன்னும் வரப்போகும் காலத்தில் சிறுநீரக அறுவை சிகிச்சை முன்னேற்றம் காணப்படப் போகிறது.
- நோயாளிக்கு குறைந்த அளவிலான ஊடுருவும் வழியில் சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
- சிறுநீரக புற்றுநோயின் பல்வேறு வடிவங்களுக்கான மரபணு சிகிச்சை தீர்வுகளின் உதவியுடன் சிகச்சை அளிக்கப்படும் .
- டோமோடென்சிட்டோமெட்ரிக் அல்லது காந்த அதிர்வு எண்டோஸ்கோபி முறைகள் சிறுநீரக பாதையில் இருக்கும் பிரச்சனைகளை எளிதாக காட்ட உதவும்
- சிறுநீரக புற்று நோய் கட்டிகளை முன்னரே கண்டுபிடிக்கும் வசதிகள் உருவாகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is Urology?". CAU (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
- ↑ "Anatomy of the Urinary System". www.hopkinsmedicine.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
- ↑ "Urologists: What they do and what to expect". Medical News Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.