சிறுபஞ்சமூலம் பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

சிறுபஞ்ச மூலம் நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

சிறுபஞ்ச மூலம் நூலை இயற்றியவர் சைனர். இதற்குப் பழைய உரை எழுதிய ஆசிரியரும் சைனர் எனத் தெரிகிறது. ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள கருத்துகள் ஐந்து என்பதைப் பகுத்துணருமாறு உரை தெளிவாக அமைந்துள்ளது.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
    • 1875 கொ. சண்முக முதலியார் பதிப்பு
    • 1944 வையாபுரிப் பிள்ளை பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுபஞ்சமூலம்_பழைய_உரை&oldid=1881294" இலிருந்து மீள்விக்கப்பட்டது