சிறுமூளை cerebellum( pl. cerebella அல்லது cerebellums ; இலத்தீன் மொழியில் "சிறிய மூளை") என்பதுஅனைத்து முதுகெலும்புகளின் பின் மூளையின் முதன்மைக் கூறாகும். பொதுவாக பெருமூளை விட சிறியதாக இருந்தாலும், மோர்மிரிட் மீன்கள் போன்ற சில விலங்குகளில் அது பெரியதாகவோ அல்லது இன்னமும்பெரியதாகவோ இருக்கலாம்.[1] மனிதர்களில், சிறுமூளை உடலின் இயக்கக் கட்டுப்பாட்டில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இது கவனம் மற்றும் மொழி போன்ற சில அறிவாற்றல் செயல்பாடுகளிலும், அச்சம், இன்பம் சார்ந்த துலங்கல்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற உணர்ச்சிக் கட்டுப்பாடுகளிலும் ஈடுபடலாம். ஆனால் அதன் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ளன. மனிதச் சிறுமூளை இயக்கத்தைத் தொடங்காது, ஆனால் ஒருங்கிணைப்பு, துல்லியம், மேலும் துல்லியமான நேரத்துக்குப் பங்களிக்கிறது: இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் பிற பகுதிகளிலிருந்து உள்ளீட்டைப் பெறுகிறது, மேலும் இந்த உள்ளீடுகளை இயக்கச் செயல்பாட்டிற்கு ஒருங்கிணைக்கிறது.[2][3] சிறுமூளையின் சிதைவு மனிதர்களில் நேர்த்தியான இயக்கம், சமனிலை, தோரணை, இயக்க உணர்தல் ஆகியவற்றில் கோளாறுகளை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. மூளையைப் பற்றிய தகவல்கள்)". National Institutes of Health. பார்த்த நாள் 2009-07-02.
  2. மூளை அட்லஸ் - பின்மூளை". லண்ட்பர்க் நிறுவனம் - மூளை ஆராய்ச்சியாளர் மீட்டெடுக்கப்பட்டது 2015-06-08.
  1. Hodos W (2009). "Evolution of Cerebellum". Encyclopedia of Neuroscience. Berlin, Heidelberg: Springer. pp. 1240–1243. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-29678-2_3124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-23735-8.
  2. "Evaluating the affective component of the cerebellar cognitive affective syndrome". Journal of Neuropsychiatry and Clinical Neurosciences 21 (3): 245–53. 2009. doi:10.1176/jnp.2009.21.3.245. பப்மெட்:19776302. 
  3. "Cognition, emotion and the cerebellum". Brain 129 (Pt 2): 290–2. February 2006. doi:10.1093/brain/awh729. பப்மெட்:16434422. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமூளை&oldid=3868654" இலிருந்து மீள்விக்கப்பட்டது