சிறுவன்
சிறுவன் அல்லது இளம் ஆண் என்பவர் ஒரு சிறு வயது ஆண்மகன். 18 வயதுக்குக் குறைவான ஆண் (அல்லது) பருவ வயதுக்குக் கீழ் உள்ள இளைஞன், சிறுவன் என அழைக்கப்படுவார். இவ்வயதினரை பையன் அல்லது பாலகன் எனவும் அழைப்பர். இதன் பெண்பால் சிறுமி ஆகும்.
இலக்கியப் பயன்பாடு
தொகு"அன்றே சொன்னான்
ஆயர் குல சிறுவன்"
இதில் "சிறுவன்" எனும் சொல், சிறு வயதுக் கண்ணனைக் குறிப்பதாகும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
தொகு- சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலியன கடவுளைச் சிறுவனாக எண்ணிப் போற்றப்படும் கடை மூன்று பருவங்கள் ஆகும்.
சிறுவர்களுக்கானப் படைப்புகள்
தொகு- தமிழில் சிறுவர்களுக்கான படைப்புகளில் இன்றளவும் சிறந்த ஒன்று - "ஆத்திச்சூடி" (எழுதியவர்: ஒளவையார்)
- அம்புலிமாமா - சிறார்களைக் கவர்ந்த இதழ்களில் ஒன்று.
இதரப் படைப்புகள்
- "உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன்" (தொகுப்பும், தமிழாக்கமும்: இரா.நடராசன்)
- இந்த தொகுப்பு சிறுவர் உலகை பெரியவர்கள் தெரிந்து கொள்வதற்காகவா?
- இல்லை புவியின் மாயைகளில் இருந்து சிறுவர்கள் தெளிந்து கொள்வதற்காகவா?
- - என்ற கேள்வியுடனே நீளும் மிகச்சிறந்த படைப்பாய் அமைந்திருக்கிறது.
- "கடலோரத்தில் ஒரு சிறுவன்" (எழுத்தாளர்: யூ.மா. வாசுகி)