சிறுவாட்டுக்காடு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் பாச்சலுார் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ துாரத்தில் அழகான மலைத்தொடராக சிறுவாட்டுக்காடு அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து ஒட்டன்சத்திரம் வட்டம் முழுவதையும் ரசிக்க முடியும்.

சரணாலயம்

தொகு

இந்த மலைப்பகுதியில் செவ்வணில் அதிகமாக காணப்படுகிறது. இவ்வகை அணில்கள் சாதாரணமான அணில்களை விட மிகப்பொியதாக இருக்கும். மரங்களில் மட்டுமே வாழும். வால்கள் மிக நீளமாக காணப்படும். இதன் எடை 15 கிலோகிராம் வரை இருக்கும். இவை தாவரஉண்ணி வகையை சார்ந்தது. தமிழக அரசால் வனப்பகுதி பாதுகாக்கப்படுவதால் இவ்வகை இனங்கள் அழியவில்லை. இவைகள் தவிர மான்கள், காட்டெருமைகள், யானைகள், செந்நாய்கள் வாழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவாட்டுக்காடு&oldid=1942702" இலிருந்து மீள்விக்கப்பட்டது