சிறு வரைவி (Mini Drafter) என்பது வரைபடங்களை சுலபமாகவும் சரியாகவும் வரையப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் செங்கோண வடிவ அளவுகோலின் மூலம் நாம் வரைதாள் ஒரு கிடைமட்ட கோட்டினையும் அதற்கு இணையான (Parallel) மற்றும் செங்குத்தான (Perpendicular) கோடுகளை வரைய முடியும். மேலும் கிடைமட்டமாக (0 பாகை) மட்டுமின்றி அளவுகோலினை 360 பாகை வரை மாற்றி அமைத்து தேவையான கோணத்தில் கோடுகளை வரையலாம்.
அளவுகோலினை வரைதாளின் எந்த இடத்தில் நகர்த்தி கொண்டு சென்றாலும் நாம் நிறுவிய கோணமானது மாறாது என்பது இதன் சிறப்பம்சம். இன்றளவும் பொறியியல் கல்லூரிகளில் சிறு வரைவி கொண்டு தான் வரைய பயிற்றுவிக்கப்படுகிறது.

பொருத்தும் முறை

தொகு

வரை பலகையின் மீது வரைதாளை வரைதாள் கவ்வி கொண்டு நான்கு மூலையிலும் பொருத்த வேண்டும். பிறகு அளவுகோலின் நேர் எதிர் முனையை, வரை பலகையின் மேல் இடது பக்க ஓரத்தில் பொறுத்த வேண்டும். சிறு வரைவியின் திருகாணியை ஆடாதவண்ணம் வரைபலகையுடன் நன்கு இறுக்கிவிட வேண்டும், இல்லையெனில் கோணம் மாற வாய்ப்புண்டு. பின்னர் அளவுகோலில் நமக்குத் தேவையான கோணத்தினை நிறுவி வரையத் துவங்கலாம்.

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_வரைவி&oldid=797698" இலிருந்து மீள்விக்கப்பட்டது