சிற்பக்கலை கை முத்திரைகள்

சிற்பக்கலை கை முத்திரைகள் என்பவை இந்துக் கோயில்களில் உள்ள சிலைகள் காட்டுகின்ற கை முத்திரைகள் ஆகும். இந்தக் கை முத்திரைகளைக் கொண்டு பல்வேறு விளக்கங்களை சிற்பக்கலை வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்து சமயக் கடவுள்களின் இறை ஓவியங்களிலும் இந்த முத்திரைகள் காணப்படுகின்றன.

இதனை ஹஸ்த முத்திரை, கை இலக்கணம், கை அமைதி எனவும் அழைக்கின்றனர்.

முத்திரைகள்

தொகு

ஹஸ்த முத்திரைகள் மொத்தமாக 32 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 24 முத்திரைகள் தொழிற்கை முத்திரைகள் ஆகும். மீதம் எழிற் கை முத்திரைகள் என நான்கும், இரட்டை கை முத்திரைகள் நான்கும் உள்ளன.

தொழிற் கை முத்திரைகள்

தொகு
  1. அபய ஹஸ்தம்
  2. வரத ஹஸ்தம்
  3. கடக ஹஸ்தம்
  4. சிம்மகர்ண ஹஸ்தம்
  5. வியாக்யான ஹஸ்தம்
  6. சூசி ஹஸ்தம்
  7. தர்ஜனி ஹஸ்தம்
  8. கர்த்தரீமுக ஹஸ்தம்
  9. அலபத்ம ஹஸ்தம்
  10. விஸ்மய ஹஸ்தம்
  11. பல்லவ ஹஸ்தம்
  12. நித்ரா ஹஸ்தம்
  13. அர்த்த சந்திர ஹஸ்தம்
  14. அர்த்த பாதக ஹஸ்தம்
  15. திரிசூல ஹஸ்தம்
  16. முஷ்டி ஹஸ்தம்
  17. சிகர ஹஸ்தம்
  18. பூ ஸ்பரிச ஹஸ்தம்
  19. கடி ஹஸ்தம்
  20. ஊரு ஹஸ்தம்
  21. ஆலங்கன ஹஸ்தம்
  22. தனுர் ஹஸ்தம்
  23. டமரு ஹஸ்தம்
  24. தாடி ஹஸ்தம்
  • ஸூசி ஹஸ்தம் - ஆள் காட்டி விரலை மேல் நோக்கி காட்டிய நிலையும், மற்ற விரல்கள் மடித்தும் உள்ளதாக இருக்கும்.
  • தர்ஜனி ஹஸ்தம் - ஆள் காட்டி விரலை மேல் நோக்கி காட்டிய நிலையும், மற்ற விரல்கள் மடித்தும் உள்ளதாக இருக்கும்.
  • கடி ஹஸ்தம் - சிலை தன்னுடைய இடக்கையை இடையின் மீது பற்றியபடி இருக்கும்.
 
அபய முத்திரை
  • அபய ஹஸ்தம் - சிலையின் கை விரல்கள் மேல் நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்களை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும். [1]
 
வரத முத்திரை
  • வரத ஹஸ்தம் - சிலையின் கை விரல்கள் கீழ் நோக்கி நீட்டியபடியும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும். [1]
  • ஊரு ஹஸ்தம் - சிலையின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.
  • கடக ஹஸ்தம்
 
சிம்ம கரண ஹஸ்தம்

இரு கை முத்திரைகள்

தொகு
கோட்டோவியங்களுடன் விளக்கம்
வரிசை எண் முத்திரைகள் கோட்டோவியம்
1 அஞ்சலி ஹஸ்தம்  
2 தியான ஹஸ்தம்  
3 புஷ்பபுட ஹஸ்தம்  
4 தர்மசக்கர ஹஸ்தம்  

எழிற் கை முத்திரைகள்

தொகு
கோட்டோவியங்களுடன் விளக்கம்
வரிசை எண் முத்திரைகள் கோட்டோவியம்
1 கஜ ஹஸ்தம்  
2 தண்ட ஹஸ்தம்  
3 டோல ஹஸ்தம்  
4 பிரசாரித ஹஸ்தம்  

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 "பக்தியுடன் பதில்கள் - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements".