சிற்றம்பலநாடி கட்டளை
சிற்றம்பலநாடி கட்டளை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சைவ ஆசாரியரால் எழுதப்பட்டது. சாத்திர உண்மைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அளவுபடுத்தி உரைக்கும் உரைநடை நூல் இது.
பிற்காலத்தில் வேதாந்த-பரமாகவும், சித்தாந்த-பரமாகவும் பல நூல்கள் தோன்றின. இவற்றிற்கெல்லாம் ஆதியாக அமைந்த நூல் இந்தக் கட்டளை நூல்.
மெய்கண்ட சாத்திரக் கட்டளை என்னும் புதுப்பெயர் சூட்டப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது. [1]
இந்த நூல் நெய்கண்ட சாத்திர மரபாகிய பதி, பசு, பாசம் என்னும் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ சித்தாந்தம், மலர் 15, (1942), இதழ் 6&9