சிலந்தி நச்சு

சிலந்தி நச்சு என்பது சிலந்திகளால் உற்பத்தி செய்யப்படும் புரதப் பொருட்களாகும். இவை நரம்பின் செயல்பாட்டினைப் பாதிக்கும்நியூரோடாக்சின்களாக செயல்படுகின்றன. பெரும்பாலும் இந்த நச்சுகள் கால்சியம் தடம் வழியாகச் செயல்படும் நரம்பணு தூண்டல்களைத் தடுப்பதாகும்.

அட்ராகோடாக்சின்கள் எனும் புரத நச்சுக்கள் சோடியம் தடத்தினை திறப்பதன் மூலம் செயல்படுகிறது. சிட்னி புனல்-வலை சிலந்தியின் விசமான டெல்டா-அட்ராகோடாக்சின், மின்னழுத்த-வாயிலான சோடியம் தடங்களைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் விலங்குகளில் ஆபத்தினை விளைவிக்கின்றன.[1] அட்ராகோடாக்சினின் கட்டமைப்பில் முக்கியமாக பீட்டா பகுதியை உள்ளடக்கியுள்ளது. இது பீட்டா பகுதியிலிருந்து நீண்டு மூன்று மடங்கு கட்டைவிரல் போன்ற நீட்டிப்பு மற்றும் சி-டெர்மினல் சுருளைக் கொண்டுள்ளது. பீட்டா பகுதியில் சிஸ்டைன் முடிச்சு மையக்கரு உள்ளது.[1] பிற சிலந்தி நச்சான சிஎஸ்டிஎக்சு புரதங்களில்களில் காணப்படுகிறது.

சிலந்தி நச்சுகளின் மற்றொரு புரதத்தொகுப்பு சிலந்தி பொட்டாசியம் சேனல் தடுப்பு நச்சாகும். இந்த குழுவின் பிரதிநிதி கனாடாக்சின் என்ற 35 அமினோ அமிலம் தொகுதியினைக் கொண்ட புரதக்கூறு ஆகும். இது சிலி ரோசு டரான்டுலாவிலிருந்து (கிராமோஸ்டோலா ரோசியா= கி. இசுபாட்டுலாட்டா) பிரித்தெடுக்கப்பட்ட விசமாகும். இது ஆற்றல் மாற்ற டிஆர்கே1 மின்னழுத்த-கேடட் பொட்டாசியம் சேனலைத் தடுக்கிறது.[2] (கீவென்டாக்சின் -1 காண்க).

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "The structure of versutoxin (delta-atracotoxin-Hv1) provides insights into the binding of site 3 neurotoxins to the voltage-gated sodium channel". Structure 5 (11): 1525–1535. 1997. doi:10.1016/S0969-2126(97)00301-8. பப்மெட்:9384567. 
  2. "Solution structure of hanatoxin1, a gating modifier of voltage-dependent K(+) channels: common surface features of gating modifier toxins". J. Mol. Biol. 297 (3): 771–780. 2000. doi:10.1006/jmbi.2000.3609. பப்மெட்:10731427. 

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்தி_நச்சு&oldid=3206958" இலிருந்து மீள்விக்கப்பட்டது