சிலந்தி பொறி வரி
சிலந்தி பொறி வரி (Trap line) என்பது சில விண்மீன் நெசவு சிலந்திகள் தங்கள் வலையில் புதிதாகப் பிடிக்கப்பட்ட இரையைப் பற்றி அறியும் ஒரு விழிப்புணர்வு முறையாகும்.[1]
இவை பட்டினால் ஆன தடம் ஒன்றினை வலையின் மையத்தில் சுற்றி இணைக்கின்றது. சிலந்தி இதன் அருகில் தங்கி, இதன் இரைக்காகக் காத்திருக்கிறது. பெரும்பாலும் ஈ அல்லது கொசு போன்ற சிறிய பூச்சி இந்த வலையில் ஒட்டிக்கொள்ளும். இரை வலையில் இருக்கும்போது பொறி தடம் அதிர்கிறது. இந்த அதிர்வு சிலந்திக்கு விழிப்புணர்வினைத் தரும். இதனால் சிலந்தியானது இரையை நோக்கிச் சென்று இரையினை உண்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 World Book Encyclopedia, 1972.