சிலப்பதிகாரத்தில் கூத்து
கடலாடுகாதை
சிலப்பதிகாரத்தில் கூத்தர், கூத்தியர் எனக் கூத்தாடுபவர்களைக் குறிப்பதை அறியமுடிகிறது. கூத்தியர் வேத்தியல், பொதுவியல் என இருவகைக் கூத்தினையும் (நடனம்) ஆடவல்லவர்கள்.
வேத்தியல் கூத்து என்பது அரசர்களுக்கு முன்பு ஆடுவது. பொதுவியல் கூத்து பொது மக்களுக்கு முன்பு ஆடக்கூடியது.
கூத்து வகைகள்
தொகு- கொடுகொட்டி - சுடுகாட்டிலே சிவபெருமான் உமையொரு பாகனாக வெற்றிக்களிப்பில் ஆடிய கூத்து.
- பாண்டரங்கக் கூத்து - பிரம்மன் முன்னர் பாரதி வடிவமாகிய இறைவன் வெண்ணீறு அணிந்து ஆடியது.
- அல்லியத் தொகுதி - கஞ்சனின் வஞ்சனையை வெல்லும் பொருட்டுக் கரிய நிறததோனாகிய மாயோன் ஆடிய கூத்து.
- மல்லாடல் - வாணாசுரன் எனும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாக ஆடியது.
- துடிகொட்டி - சூரபத்மனை வென்ற முருகன் ஆடிய கூத்து
- குடைக்கூத்து - தோற்ற அசுரர்கள் முன் தன் குடையைச் சாய்த்துச் சாய்த்து முருகன் ஆடிய கூத்து
- குடக்கூத்து - மாயோன் குடத்தைக் கொண்டு ஆடிய கூத்து
- பேடிக்கூத்து - ஆண்தன்மை நீங்கி பெண் தன்மையோடு காமன் ஆடிய கூத்து
- மரக்கால் கூத்து - துர்க்கை அசுரரை அழித்து சினத்தோடுஆடிய கூத்து
- பாவைக்கூத்து - செந்நிறமுடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடிய கூத்து
- கடையக்கூத்து - இந்திராணி உழவர்கள் குலத்துக் கடைசியர் வடிவு கொண்டு ஆடிய கூத்து
- சாந்திக்கூத்து - நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து
மேற்கோள் நூல்கள்
தொகு- நாடகத்தமிழ் - கா. லட்சுமி