சிலம்பின் காலம் (நூல்)
சிலம்பின் காலம் எனும் நூல் 2012ம் ஆண்டு கிருசுணன் இராமசாமி என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூலாகும். இந்நூல் தமிழ் இணையக் குழுமங்களிலும், அவரது வலைப்பதிவிலும் எழுதிவந்த கட்டுரைகளை விரிவாக்கி தொகுப்பாக்கம் பெற்ற நூலாகும்.[1]
நூலாசிரியர் | கிருசுணன் இராமசாமி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழினி |
வெளியிடப்பட்ட நாள் | 2012 |
பக்கங்கள் | 174 |
நூல் வெளியீடு
தொகுஇந்த நூல் தமிழினி பதிப்பகத்தாரால் 2012, சனவரி 3ம் நாள் சென்னை கன்னிமாரா நூலக அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேரா. க.நெடுஞ்செழியன் வெளியிட, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் (SRM university) துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ முதற்படியைப் பெற்றுக் கொண்டார்.[2]
சான்றுகோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- சிலம்பின் காலம் - இராம. கி (இணையத்தில் பெற)