சிலாவிகைட்டு
சிலாவிகைட்டு (Slavíkite) என்பது (H3O+)3Mg6Fe15(SO4)21(OH)1898H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். நீரேற்ற கார மக்னீசியம் பெர்ரிக் சல்பேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சிலாவிகைட்டு கனிமம் போகிமியாவிலிருந்து கிடைக்கும் களிமண் பாறைகள் மற்றும் உருமாறிய கற்பலகைகளில் கிடைக்கும் பைரைட்டு கனிமத்தின் ஆக்சிசனேற்ற விளைபொருளாகும்.[1] 1924 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரை அறிவியல் பீடத்தின் தலைவராகவும் 1937 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத் துணை முதல்வராகவும் பிராகா நகரின் சார்லசு பல்கலைக்கழகத்தில் இருந்த பிரான்டிசெக் சிலாவிக்கு நினைவாக கனிமத்திற்கு 1926 ஆம் ஆண்டில் சிலாவிகைட்டு என்று பெயரிடப்பட்டது.[2]
சிலாவிகைட்டு Slavíkite | |
---|---|
ஆல்பர்சைட்டு படிகங்களுடன் சிலாவிகைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | (H3O+)3Mg6Fe15(SO4)21(OH)18·98H2O |
இனங்காணல் | |
நிறம் | வெளிர் மஞ்சள் கல்நத பச்சை |
படிக அமைப்பு | முக்கோணம் |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | பளபளப்பும் மங்கலும் |
ஒப்படர்த்தி | 1.905 - 1.99 |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிலாவிகைட்டு கனிமத்தை Sví என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Slavíkite". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
- ↑ "Slavíkite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.