சிலேட்டுக் கல்
சிலேட்டுக் கல் (Slate) வெப்பத்தால் களிப்பாறையிலிருந்து அடர்த்தி குறைந்த உருமாறிய பாறை ஆகும். இது மெல்லிய தகடு போன்று காணப்படும்.
பயன்பாடுகள்
தொகுபலநாடுகளில் வீட்டின் கூரைகள் வேய்வதற்கு பெரிய இலைகளுக்கு பதிலாக சிலேட்டுக் கற்பலகைகள் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவானது ஆகும். இலைகளை விட நீண்ட காலம் பயன்படுகிறது. தளத்திற்கு (உள்ளேயும் வெளியேயும்) கனமான ஸ்லேட்டுக் கற்பலகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கல்லறை நினைவுக்கற்கள், மற்றும் நினைவுப் பலகைகளுக்கு சிலேட்டுக் கற்கள் பயன்படுத்துகிறார்கள். தடிமனான ஸ்லேட்டு பலகைகள் பில்லியர்ட் விளையாட்டு மேஜை மற்றும் ஆய்வகக மேஜைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிலேட்டுப் பலகைகள் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வேதியியல் எதிர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்விநிலையங்களில் எழுத்துப் பலகைகளுக்கு சிலேட்டுப் கற்பலகைகள் பயன்படுகிறது. முன்னர் துவக்கப்பள்ளிக் குழந்தைகள் எழுதுவதற்கு சிலேட்டுக் கற்பலகைகள் பயன்படுத்தினர்.