சில்வியா தாரெசு பீய்ம்பெர்ட்

சில்வியா தாரெசு பீய்ம்பெர்ட் (Silvia Torres-Peimbert) (பிறப்பு: 1940)ஒரு மெக்சொகோ வானியலார் ஆவார். இவர் 2011 இல் யுனெசுகோவின் அறிவியல் பெண்களுக்கான லோரியல் விருதை இலத்தின அமெரிக்காவுக்காகப் பெற்றார். இப்பரிசு வளிம ஒண்முகிலின் வேதி உட்கூறுகளைத் தீர்மானித்தமைக்காக வழங்கப்பட்டது.

சில்வியா தாரெசு பீய்ம்பெர்ட்
Silvia Torres-Peimbert
Silvia torres-peimbert2-recadrée.jpg
Torres-Peimbert, ஜூலை 2015
பிறப்பு1940 (அகவை 80–81)
மெக்சிகோ நகரம், மெக்சிகோ
தேசியம்மெக்சிகர்
விருதுகள்ஏன்சு பெத்தே பரிசு (2012)

வாழ்க்கைதொகு

இவர் 1940 இல் மெக்சிகோ நகரத்தில் பிறந்தார். இவர் மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கற்றார். பின்னர் இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் மெக்சிகோவுக்கு தன் முதுமுனைவர் ஆராய்ச்சி செய்ய திரும்பினார். இவர் விண்மீன்களின் உருவாக்கத்தையும் நடுநிலையளவு விண்மீன்கள் வீசியெறியும் பொறுண்மையையும் பற்றி ஆய்வு செய்துவருகிறார். இவர் பெருவெடிப்பின்போது எஞ்சிய எல்லியப் பரவலை ஆய்ந்துள்ளார்.[1] இவர் மெக்சிகோ தேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார். பிறகு, 1998 இல் இருந்து 2002 வரையில் அந்நிறுவன இயக்குநராக இருந்தார். இக்காலத்தில்லிவர் மானுவேல் பீய்ம்பெர்டுடன் நெருக்கமாக பணிபுரிந்தார்.[2] தாரெசு பீய்ம்பெர்ட்டும் பீய்ம்பெர்ட்டும் குவில்லெர்மோ ஆரோ மாணவர்கள் அவர். இவர் தான் முதன்முதலாக 1958 இல் வளரும் நாடுகளில் இருந்து அரசு வானியல் கழகத்துக்குத் தேர்வாகியவர் ஆவார்.[3]

இவர் புலமைசால் வானியல், வானியற்பியல் இதழின் பதிப்பாசிரியராக இருந்துள்ளார்.[1]

இவர் 2011 இல் யுனெசுகோவின் அறிவியல் பெண்களுக்கான லோரியல் விருதை இலத்தின அமெரிக்காவுக்காகப் பெற்றார்.[4] இந்த விருது ஐந்து கண்டங்களுக்கு அறிவியலில் முன்னணியில் விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இவருக்கு இந்த விருது வளிம ஒண்முகில்களின் வேதி இயைபை ஆய்வு செய்தமைக்காக வழங்கப்பட்டது. விருது வழங்கியோர் இவ்வாய்வு தொடக்கநிலை அண்ட்த்தைப் புரிந்துகொள்ல இன்றியமையாததாக்க் கருதியுள்ளனர்.[4] இவர் 2012 இல் ஏன்சு பெத்தே பரிசையும் பெற்றார். இப்பரிசு இவருக்கு புடவியின் தொடக்கநிலை வளர்ச்சின்போது எல்லியம் மற்றும் பிற தனிமங்களின் அளவைத் தீர்மானித்தமைக்காக தரப்பட்டது. இந்த தனிமங்களை அறிதல், பால்வெளிகளும் விண்மீன்களும் உருவாதலைப் புரிந்துகொள்ள அண்டவியலாளர்களுக்கு உதவுகிறது.[2]

இவர் 2015 முதல் 2018 வரையில் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தலைவராக (இவரே இரண்டாவதாக இப்பதவியை வகித்த பெண்மணி ஆவார்) தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் அமெரிக்க வானியல் கழகத்திலும் வளரும் நாடுகளின் அறிவியல் கல்விக்கழகத்திலும் உறுப்பினரும் ஆவார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Silvia Torres-Peimbert, unam.mx, retrieved 17 March 2014
  2. 2.0 2.1 2012 Hans A. Bethe Prize Recipient, American Physical Society, retrieved 18 March 2014
  3. Bracher ... [et al.](editors), Katherine (2007). The biographical encyclopedia of astronomers ([Online-Ausg.] ). New York, NY: Springer. பக். 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0387304002. https://books.google.com/books?isbn=0387304002. 
  4. 4.0 4.1 4.2 Professor Silvia Torres-Peimbert wins the L’Oréal-UNESCO Award for Women in Science, International Astronomical Union, retrieved 18 March 2014