சிவகங்கை பூங்கா

சிவகங்கை பூங்கா தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பெரிய கோயிலின் அருகே அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற பொழுதுபோக்குப் பூங்கா ஆகும்.[1]

வரலாறுதொகு

1871-72இல் தஞ்சாவூர் நகராட்சியால் பொது மக்களுக்காக இப் பூங்கா உருவாக்கப்பட்டது.[1] 11ஆம் நூற்றாண்டை சார்ந்த பிரகதீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதி மற்றும் இதனுள் உள்ளடங்கிய சிவகங்கை குளம் அனைத்தும் அரசர் ராசராச சோழனால் கட்டப்பட்டது.ஆரம்ப காலகட்டங்களில் சரியாக பராமரிக்கப்படாததால் கூட்டம் அதிகமாகவும், காற்றோட்டம் இல்லாமாலும் காணப்பட்டது.ஆனால் தற்போது நன்கு பராமரிக்கப்படுகிறது.[1] 1994 உலக தமிழ் மாநாட்டிற்கு வழிவகுக்கும் நடவடிக்கையின் போது சிவகங்கைக் குளத்தில் மோட்டார் படகு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[2]

வசதிகள்தொகு

சிவகங்கைப் பூங்காவில் பொம்மை ரயில், மோட்டார் படகு வசதிகள் மற்றும் சிறு விலங்கியல் தோட்டம் அமைந்துள்ளது.[3] தஞ்சாவூர் நகராட்சி நூலகம் கூட இப்பூங்காவில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Hemingway, F. R. (1907). Tanjore District Gazetteer. Government Press. பக். 271. 
  2. Frontline (S. Rangarajan) 12 (1-8): 76. 1995. 
  3. 3.0 3.1 Sura Guide, p 79

உசாத்துணைதொகு

  1. Tourist Guide to Tamil Nadu, Chennai, Sura Maps, 2008, ISBN 81-7478-177-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_பூங்கா&oldid=2761553" இருந்து மீள்விக்கப்பட்டது