சிவக்கலைகள் என்பன சைவசமயத்தின் சிவதத்துவங்களை அறிந்துகொள்ளும் கூறாகும். சிவக்கலையும் சிவயோகமும் ஒரே தங்க நாணயத்தின் இருபக்கங்கள் எனசிவக்கலையும் சிவயோகமும் என்ற கட்டுரையில் நா செல்லப்பா கூறியுள்ளார்.

வகைகள் தொகு

இந்த சிவக்கலைகள் ஐந்து வகைப்படுகின்றன. [1]

  1. நிவர்த்திக்கலை
  2. பிரதிட்டாகலை
  3. வித்தியாகலை
  4. சாந்திக்கலை
  5. சாந்தியாதீதக்கலை

நிவர்த்திக்கலை: நிவர்த்திக்கலை என்பதை நிவிருத்திக்கலை என்றும் கொள்வர். இக்கலையின் நோக்கமானது மனதில் விருத்தியாகி இயங்கும் எண்ணங்களை அகற்றுவதாகும். கற்பனையில் இறைவனை காணுதல் இயலாது என்பதால் இறையைக் காண கற்பனை அழிப்பினை செய்ய வேண்டுவதே நிவர்த்திக்கலையின் நோக்கமாகும்.

பிரதிட்டாகலை: இறைவனுடைய அருட்சக்தியை மனதில் பிரதிட்டை செய்து வணங்கும் கலையாகும்.

வித்தியாகலை: வித்தியாகலை என்பது வித்தைகளை பெரும் பொருட்டு செய்யப்படும் கலையாகும். இக்கலை பூர்ண சிவக்கலையை சேராதிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சாந்திக்கலை: சாந்திக்கலை என்பது மன அமைதி வேண்டி சிவபெருமானை சரணடைதலாகும். இக்கலையில் சிவபக்தியுடன் பஞ்சாட்சர மந்திரத்தில் உள்ள சிவ எனும் இரண்டு அட்சரங்களை இடைவிடாது செபிக்கும் முறையுள்ளது.

சாந்தியாதீதக்கலை: சிவபதத்தினை அடைய முப்பத்தாறு சிவதத்துவங்களையும், இடம் காலம் காரணம் என்ற மூன்று பரிணாமங்களையும் விட்டு விலக முயற்சி செய்வது சாந்தியதீதக் கலையாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. ஏழாவது உலக சைவ மாநாடு - கனடா சிறப்பு மலர் இதழ் பக்கம் 66

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவக்கலை&oldid=2087292" இலிருந்து மீள்விக்கப்பட்டது