சிவண் என்பது வழக்கிறந்த பண்டைய தமிழ்ச்சொற்களில் ஒன்று. சங்க இலக்கியங்களில் இது கையாளப்பட்டுள்ள பாங்கையும் பொருளையும் இந்த நிரலில் காணலாம்.

நிரல்

தொகு
சொல் சொல்லாட்சி பொருள்
சிவண சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல், சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,[1]
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப், புல்லி, பெரும! செல் இனி, அகத்து என [2]
சேறு படிந்து காய்ந்த பன்றி முதுகு வெண்ணீறு போல் காணப்பட்டது
தன் வீட்டுக்குத் திரும்பும் தலைவனின் மார்பைப் பரத்தை தன் வாயைப் பொருத்தி முத்தமிட்டு அழுத கண்ணினளாய் அனுப்பிவைத்தாள்.
சிவணல் பல்லவை நுதலிய அகர இறுபெயர், வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. [3]
தம்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்,[4]
'பல' என்னும் சொல் 'வற்று' என்னும் சாரியையோடு பொருந்துதல் விலக்கு ஆகாது [5]
ஆகுபெயர் அதனதன் பொருளோடு பொருந்தி வரும்
சிவணாது `அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம், அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும், விளியொடு கொள்ப' தெளியுமோரே.[6] - தாயைக் குறிக்காமல் பொதுப்பட பிறரை விளிக்கும் 'அம்ம' என்னும் சொல் 'அம்ம' என்னும் முறைப்பெயருடன் பொருந்தாமல் 'அம்மா' என நீட்டத்துடனும் வரும்
சிவணி சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத், தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும், தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி, ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் [7] சார்பெழுத்துக்களின் பிறப்பு தம் இன எழுத்துக்களின் பிறப்போடு பொருந்தி வரும்
சிவணிய துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு [8] துடுப்போடு பொருந்திக்கொண்டிருக்கும் வெண்பொங்கல் சோறு
சிவணும் மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் [9] மெய்யெழுத்து 'அ' எழுத்தோடு பொருந்தி ஒலிக்கும்

அடிக்குறிப்பு

தொகு
  1. நற்றிணை 82
  2. அகநானூறு 66
  3. தொல்காப்பியம் 1-175
  4. தொல்காப்பியம் 2-115
  5. பலவற்றுக் கிளைகள்
  6. தொல்காப்பியம் 2-153
  7. தொல்காப்பியம் 1-101
  8. புறநானூறு 328
  9. தொல்காப்பியம் 1-46
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவண்&oldid=1509339" இலிருந்து மீள்விக்கப்பட்டது