சிவத்தல சிவநாம சத்திநாமக் கலிவெண்பா
சிவத்தல சிவநாம சத்திநாமக் கலிவெண்பா என்னும் நூலின் பெயர் சிவஸ்தல சிவநாம சத்திநாமக் கலிவெண்பா என்றே உள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாசாரியர் என்பவரால் எழுதப்பட்டது. 300 கண்ணிகளைக் கொண்ட இந்த நூலில் 274 சிவத்தலங்கள் [1] போற்றிப் பாடப்பட்டுள்ளன. ஊரின் பெயர், சாமியின் பெயர், அம்பிகையின் பெயர் ஆகியவை அடுக்கிக் கூறப்பட்டுள்ளன.
இந்த நூலின் ஆசிரியர் உமாபதியார் திருத்தொண்டர் திருநாமக் கோவை என்னும் நூலும் செய்தார் எனக் கூறப்படுகிறது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ சிவன் கோயில் உள்ள ஊர்கள்