சிவன் கோயில், நாராயணாபுரம்

சிவன் கோயில், நாராயணாபுரம், கர்நாடகம்

சிவன் கோயில், நாராயணாபுரம் என்பது கர்நாடக மாநிலத்தின் பீதர் மாவட்டத்தில் நாராயணபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோவில் பசவகல்யாண் நகரத்திலிருந்து நான்கு கி. மீ தொலைவிலுள்ளது.[1] மேலைச் சாளுக்கியர்களின் கட்டடக்கலைத் திறமைக்கு இக்கோயில் ஒரு சான்றாகும்.

சிவன் கோயில்
கோயில் நுழைவாயில்
சிவன் கோயில், நாராயணாபுரம் is located in கருநாடகம்
சிவன் கோயில், நாராயணாபுரம்
கர்நாடகாவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:India
மாகாணம்:கர்நாடகம்
மாவட்டம்:பீதர் மாவட்டம்
அமைவு:நாராயணாபுரம், பீதர் மாவட்டம்
ஆள்கூறுகள்:17°51′30.05″N 76°58′28.5″E / 17.8583472°N 76.974583°E / 17.8583472; 76.974583
கோயில் தகவல்கள்

கட்டிடக்கலை தொகு

இக்கோயிலில் நரசிம்மன் வதைக் காட்சி கொண்ட சிலைகள் சிலவும், விஷ்ணுவின் வெவ்வேறு உருவ சிலைகளும் காணப்படுவதால் முன்னொரு காலத்தில் இக்கோயில் விஷ்ணு கோயிலாக இருந்திருக்கலாம்.[2] இக்கோயிலின் உள் கூரைகள் அழகான தாமரை வடிவங்களைக் கொண்டுள்ளது. கோயின் வெளிச்சுற்றுச் சுவர்களில் பெண்களின் அழகான சிலைகள் காணப்படுகின்றன. வெளியே கோயிலுக்கு அருகில் ஒரு கிணறு உள்ளது. அதற்கருகில் மற்றொரு கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

கொண்டாட்டங்கள் தொகு

ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதத்தில் இக்கோயிலில் விழா கொண்டாடப்படுகிறது. கிராமத்தில் சுற்றி ஊர்வலமும் நடைபெறும்.

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Basava Kalyana".
  2. Chugh, Lalit (2016). Karnataka's Rich Heritage - Art and Architecture. Chennai: Notion press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5206-825-8.