சிவப்பு அலகு இருவாய்ச்சி
சிவப்பு அலகு இருவாய்ச்சி | |
---|---|
வடக்கு சிவப்பு அலகு இருவாய்ச்சி, தோக்குசு எரித்ரோரிஞ்சசி தாரங்கிரி தேசியப் பூங்கா | |
தோக்குசு எரித்ரோரிஞ்சசின் ஓசை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பூசெரோதிபார்மிசு
|
குடும்பம்: | பூசெரோதிடே
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | தோக்குசு
|
சிவப்பு அலகு இருவாய்ச்சி (Red-billed hornbill) என்பது சகாரா கீழமை ஆப்பிரிக்காவின் புன்னிலங்களிலும் பிற வனப்பகுதிகளிலும் காணப்படும் இருவாய்ச்சி குழுவாகும். இவை இப்போது பொதுவாக ஐந்து சிற்றினங்களாகப் பிரிக்கப்படுகின்றன; வடக்கு சிவப்பு- அலகு இருவாய்ச்சி (தோக்குசு எரித்ரோஞ்சசு), மேற்கு சிவப்பு-அலகு இருவாய்ச்சி (தோ. கெம்பி), தான்சானிய சிவப்பு-அலகு இருவாய்ச்சி (தோ. உருகே), தெற்கு சிவப்பு-அலகு இருவாய்ச்சி (தோ. உருபிரோசுட்ரிசு) மற்றும் தமாரா சிவப்பு-அலகு இருவாய்ச்சி (தோ. தமரென்சிசு). ஆனால் சில வகைப்பாட்டியலாளர்கள் பிந்தைய நான்கு சிற்றினங்களை தோக்குசு எரித்ரோரிஞ்சசின் துணையினங்களாகக் கருதுகின்றனர்.[1]
விளக்கம்
தொகுஇந்த வெளிப்படையான பறவைகளின் குழு வெண்மையான அடிப்பகுதி மற்றும் தலை, சாம்பல் மேல் பகுதிகள், நீண்ட வால்கள், நீளமான வளைந்த சிவப்பு நிற அலகினைக் கொண்டது. அலகில் ஓடு போன்ற ஒரு பகுதி இருக்காது. பாலின வேறுபாடு இல்லை. ஆனால் பெண் பறவையின் அலகு சிறிய அளவில் காணப்படும். இவை பொதுவாக பெரியவை, 42 சென்டிமீட்டர்கள் (17 அங்) நீண்டது. ஆனால் அனைத்து இருவாய்ச்சிகளும் சிறிய பறவைகளாகக் கருதப்படுகிறது.
நடத்தை
தொகுஇனப்பெருக்கம்
தொகுஇனப்பெருக்க காலத்தில் பெண் பறவை மூன்று முதல் ஆறு வெள்ளை நிற முட்டைகளை ஒரு மரத்துளையில் இடுகிறது. இத்துளை கூடாக மாற்றப்படும். இதன் நுழைவாயில் சேறு, நீர்த்துளிகள் மற்றும் பழங்களின் கூழ் ஆகியவற்றால் மூடப்பட்டிருக்கும். கூட்டின் உள்ளே பெண் முட்டைகளை அடைகாக்கும். இந்தக் கூடானது ஆண் பெண் பறவைகளால் கட்டப்படுகிறது. தாய் கூட்டிற்குள் நுழைந்தவுடன், ஒரே ஒரு குறுகிய துளை மட்டுமே கூட்டுத் தடுப்பில் காணப்படும். இத்துளை வழியாக ஆண் பறவை வெளியிலிருந்து சேகரிக்கப்பட்ட உணவைத் தாய் மற்றும் குஞ்சுகளுக்கு வழங்கும். குஞ்சுகள் வளர ஆரம்பிக்கும் போது தேவையான அளவு கூட்டினைப் பெரியதாக மாற்றும். குஞ்சுகள் ஓரளவு வளர்ந்த பின்னர் இரண்டு பறவைகளும் குஞ்சுகளுக்குத் தொடர்ந்து வெளியிலிருந்து உணவளிக்கும்.
கூடு கட்டுதல்
தொகுபெண் சிவப்பு-அலகு இருவாய்ச்சி தனது கூட்டின் திறப்பின் குறுக்கே ஒரு தடுப்பினை அமைத்து ஊடுருவும் நபர்களிடமிருந்து தனது குஞ்சுகளைப் பாதுகாக்கிறது. தன் குஞ்சுகளைப் பாதுகாப்பாக வளர்க்கும்.
உணவு
தொகுபூச்சிகள், பழங்கள், விதைகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை உணவாக எடுத்து உண்ணும். இவை அனைத்துண்ணி.[3] இவை முக்கியமாகத் தரையில் உணவு உண்ணுகின்றன. இனப்பெருக்க காலத்திற்குப் பின் கூட்டமாக வாழும்.
படங்கள்
தொகு-
தோ. உருபிரோசுட்ரிசு, தென்னாப்பிரிக்காவைச் சார்ந்தது
-
வடக்கு சிவப்பு அலகு இருவாய்ச்சி, சிவப்பு நிற கண் தோல் மற்றும் கருமையான கண்களைக் கொண்டது.
-
தோ. உருகே தான்சானியாவில் காணப்படுவது
-
தோ. தமரென்சிசு, படம் கியூலெமன்சு, 1892
-
மேற்கு ஆப்பிரிக்காவின் தோ. கெம்பி, கருமையான கண்கள் மற்றும் கருப்பு கண் தோல் இரண்டையும் கொண்ட ஒரே சிற்றினமாகும்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Red-billed Hornbill". www.hbw.com. Handbook of Birds of the World online. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ Sinclair, Ian; Ryan, Peter (2010). Birds of Africa south of the Sahara (2nd ed.). Cape Town: Struik Nature. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781770076235.
- ↑ "Twitch".