சிவப்பு மழை

சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும் மழையாகும். இது பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ எடுத்தாளப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வாகும். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு இவ்வாறான செம்மழை பொழிந்தது. இம்மழை செங்கபில நிறத்தில் காணப்பட்டது. இலங்கையில் 2012 நவம்பர் மாதம் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறான செம்மழை பொழிந்தது. இந்நிகழ்வு பல்வேறு ஆய்வு நிறுவனங்களால் ஆராயப்பட்டது.[1][2][3]

கேரளா செம்மழையில் சேகரிக்கப்பட்ட செந்நீர்

அறிவியல் விளக்கங்கள்

தொகு
 
கேரளா செம்மழையில் கிடைக்கப்பெற்ற துணிக்கைகளின் நுணுக்குக்காட்டி வரைபடம்.
  • இது மழையுடன் கலந்த தூசால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது சிவப்பு மழையாகப் பொழிவதாகக் கருதப்படுகின்றது.
  • மழையில் கலந்திருக்கும் ஒரு வகை சிவப்பு அல்காவால் செம்மழை பொழிவதாக இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் கூறுகின்றன.
  • சில அறிவியலாளர்களின் கருத்துப்படி இது வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த நுண்ணுயிர்களாயிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rajgopal, K. S. (1 April 2015). "Unravelling the 'blood rain' mystery". The Hindu. https://www.thehindu.com/sci-tech/science/unravelling-the-blood-rain-mystery/article7057859.ece. 
  2. "Coloured rain falls on Kerala", BBC, 30 July 2001, பார்க்கப்பட்ட நாள் 2010-04-01
  3. Red rain in Sri Lanka, Daily News (Sri Lanka), 16 November 2012, archived from the original on 18 November 2012, பார்க்கப்பட்ட நாள் 2012-11-16
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மழை&oldid=4098891" இலிருந்து மீள்விக்கப்பட்டது