சிவப்பு வால் மேக இறக்கை தட்டான்
சிவப்பு வால் மேக இறக்கைத் தட்டான் (coral-tailed cloudwing) Tholymis tillarga என்னும் தட்டான் இலிபெல்லுலிடே(Libellulidae) என்ற குடும்பத்தை சார்ந்த தட்டான்வகை ஆகும். மேகத்தை போன்று இறக்கைகளில் பழுப்பும் வெள்ளை நிறமும் இருப்பதால் இவை மேக இறக்கை என்னும் பெயர் பெற்றது. உயிரினப் பயன்பாட்டில் ஓடோனேட்டா என்னும் வரிசையில் இருக்கின்றது. இவற்றின் குடும்பங்களின் அறிவியற் பெயர் அனிசோப்டேரா (anisoptera ) என்பதாகும். முதிர்ந்த தட்டான் பெரிய, பன்முகப்படுத்தப்பட்ட கண்களையும், இரண்டு இணை மெலிதான இறக்கைகளும், நீடித்த உடலும் சிவந்த வாலும் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
வாழ்விடம்
தொகுஇது வெப்பமண்டல மேற்கு ஆப்பிரிக்காவில் ஆசியா, ஆத்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. இதன் பொதுவான பெயர்கள் old world twister, evening skimmer என்பனவாகும். இது வெப்பமண்டலத்தின் ஈரப்பதமான பகுதிகளில் நீர் நிலைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை இவை விரும்புகின்றன. இவ்வகை தட்டான்கள் சூரிய எழுச்சி, சூரிய மறைவு, வானம் மேக மூட்டம் ஆகிய சூழலில் காணப்படும்.
உயிரியல் வகைப்பாடு
தொகுதிணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: odonata
உள்வரிசை: அனிசோப்டிரா
குடும்பம்: Libellulidae
பேரினம்: Tholymis இனங்கள்: டில்லார்கா பினையல் பெயர் தோலிமிஸ் டில்லார்கா
உடலமைப்பு
தொகுஇவை மெல்லிய கண்ணாடி போன்ற இறக்கைகளைக் கொண்டது.ஆண் தட்டான் தனது இறக்கைகளில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும். ஆனால் பெண் தட்டான் பூச்சிகளுக்கு இந்த புள்ளிகள் இல்லை.
பறக்கும் திறன்
தொகுஅதிக தூரம், அதிவேகமாக அதிக நேரம் பறக்கும் தன்மை வாய்ந்தது. நீண்ட நேரம் பறந்த பின்னர் சற்று நேரம் பகலில் ஒரு மரத்தின் கிளையில் இளைப்பாறி விடும். ஓய்வெடுக்கும்போதும் அதன் கண்கள் தன்னைப் பின் தொடர்பவரை கண்காணிக்கும். பொதுவாக தட்டான் பூச்சிகள் மணிக்கு 80 கி.மீ விரைவில் பறக்க கூடிய தன்மை வாய்ந்தவை. இவை அழிந்து வரும் இனப்பட்டியலில் சேர்ந்துள்ளன.
காட்சிமேடை
தொகு-
சிறகுகலில் வெண்பட்டைகள் உள்ள ஆண்தட்டான்
-
பறக்கும் தட்டான்
-
சிறகுகளில் ஓரளவு நிறமுள்ள ஆண் தட்டான் பார்ப்பு
-
ஆண் தட்டான் பார்ப்பின் அடிப்புறக் காட்சி
-
ஆண்தட்டான் பார்ப்பு
-
பெண்தட்டான் பார்ப்பு
-
பெண்தட்டான் பார்ப்பு
-
முதிர்ந்த பெண்தட்டான்
-
Old female
-
சிறகுகளில் வெண்பட்டையில்லாத பெண்தட்டான்
-
பெண் தட்டான் சிறகுகள்
-
ஆண்தட்டான் சிறகுகள்
மேற்கோள்கள்
தொகுhttp://www.iucnredlist.org/details/full/60048/0
http://indiabiodiversity.org/species/show/228442
Fabricius, J.C. (1798). Supplementum Entomologiae Systematicae (in Latin). Hafniae : Proft et Storch. pp. 573 [285]. doi:10.5962/bhl.title.65803 – via Biodiversity Heritage Library.</sub